ஹதீஸ்கள்
#2945
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். லிஅவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் இரவு நேரத்தில் சென்றால், காலை நேரம் வரும்வரை அவர்கள்மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். அவ்வாறே காலையான தும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது, ‘‘முஹம்மதும் (அவரது) ஐம் படையும் (வந்துள்ளனர்)” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் முற்றத்தில் (அவர் களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن حميد، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم خرج الى خيبر فجاءها ليلا، وكان اذا جاء قوما بليل لا يغير عليهم حتى يصبح، فلما اصبح، خرجت يهود بمساحيهم ومكاتلهم، فلما راوه قالوا محمد والله، محمد والخميس. فقال النبي صلى الله عليه وسلم " الله اكبر، خربت خيبر، انا اذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2945
- Book Index
- 157
Grades
- -
