ஹதீஸ்கள்
#2942
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, ‘‘நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப் போகிறேன்; அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறக் கேட்டேன். உடனே நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்ற ஆசையோடு மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அலீ எங்கே?” என்று கேட்டார்கள். ‘‘அவருக்குக் கண் வலி” என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தமது) உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போன்று குணமாகிவிட்டது. உடனே அலீ (ரலி) அவர்கள், ‘‘நம்மைப் போன்று அவர்களும் (ஏக இறையை ஏற்போராக) ஆகும்வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதான மாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குவீராக! பிறகு அவர்களை இஸ்லாத் திற்கு அழைத்து (அதை அவர்கள் ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற வற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நல்வழி யளிக்கப்படுவது (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உமக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة القعنبي، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابيه، عن سهل بن سعد رضى الله عنه سمع النبي صلى الله عليه وسلم يقول يوم خيبر " لاعطين الراية رجلا يفتح الله على يديه ". فقاموا يرجون لذلك ايهم يعطى، فغدوا وكلهم يرجو ان يعطى فقال " اين علي ". فقيل يشتكي عينيه، فامر فدعي له، فبصق في عينيه، فبرا مكانه حتى كانه لم يكن به شىء فقال نقاتلهم حتى يكونوا مثلنا. فقال " على رسلك حتى تنزل بساحتهم، ثم ادعهم الى الاسلام، واخبرهم بما يجب عليهم، فوالله لان يهدى بك رجل واحد خير لك من حمر النعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2942
- Book Index
- 154
Grades
- -
