ஹதீஸ்கள்
#2939
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கடிதத்தை (பாரசீக மன்னர்) கிஸ்ரா வுக்கு (அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் வாயிலாக) அனுப்பிவைத்தார்கள். அதை பஹ்ரைனின் ஆட்சியாளரிடம் கொடுத்து, அதை அவர் கிஸ்ராவிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும்படி (அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களுக்கு) உத்தர விட்டார்கள். (அவ்வாறே அவர் அதைக் கொண்டு சென்று ஒப்படைக்க,) அதை(ப் பாரசீக மன்னன்) கிஸ்ரா (குஸ்ரூ) படித்தபோது, (கோபப்பட்டு) அதைக் கிழித்துவிட்டான். (ஆகவே,) ‘‘அவர்கள் முற்றாகச் சிதற டிக்கப்பட வேண்டும்” என்று அவர்களுக் கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தித்தார்கள் என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.83 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، قال اخبرني عبيد الله بن عبد الله بن عتبة، ان عبد الله بن عباس، اخبره ان رسول الله صلى الله عليه وسلم بعث بكتابه الى كسرى، فامره ان يدفعه الى عظيم البحرين، يدفعه عظيم البحرين الى كسرى، فلما قراه كسرى خرقه، فحسبت ان سعيد بن المسيب قال فدعا عليهم النبي صلى الله عليه وسلم ان يمزقوا كل ممزق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2939
- Book Index
- 152
Grades
- -
