ஹதீஸ்கள்
#2934
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுதுகொண்டி ருந்தார்கள். அப்போது அபூஜஹ்லும் குறைஷியரில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பையின் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்துவர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர் அதன் கருப்பைச் சவ்வை கொண்டுவந்து, நபி (ஸல்) அவர்களின் (தோள்)மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷியரை நீ கவனித் துக்கொள். இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள். ஹிஷாமின் மகன் அபூஜஹ்லையும் உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உபை பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரையும் (நீ கவனித்துக்கொள் வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங்கிணற்றில் கொல்லப்பட்டவர் களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன்.79 அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்” என்று கூறுகிறார்கள்.80 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில், (யிஉபை பின் கலஃப்’ என்பதற்குப் பதிலாக) யிஉமய்யா பின் கலஃப்’ என இடம்பெற்றுள்ளது. மூன்றாவது தொடரில் யிஉமய்யா அல்லது உபை’ என்று காணப்படுகிறது. யிஉமய்யா’ என்பதே சரியானதாகும்81 அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي شيبة، حدثنا جعفر بن عون، حدثنا سفيان، عن ابي اسحاق، عن عمرو بن ميمون، عن عبد الله رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يصلي في ظل الكعبة، فقال ابو جهل وناس من قريش، ونحرت جزور بناحية مكة، فارسلوا فجاءوا من سلاها، وطرحوه عليه، فجاءت فاطمة فالقته عنه، فقال " اللهم عليك بقريش، اللهم عليك بقريش، اللهم عليك بقريش ". لابي جهل بن هشام، وعتبة بن ربيعة، وشيبة بن ربيعة، والوليد بن عتبة، وابى بن خلف، وعقبة بن ابي معيط. قال عبد الله فلقد رايتهم في قليب بدر قتلى. قال ابو اسحاق ونسيت السابع. وقال يوسف بن اسحاق عن ابي اسحاق امية بن خلف. وقال شعبة امية او ابى. والصحيح امية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2934
- Book Index
- 147
Grades
- -
