ஹதீஸ்கள்
#2929
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (யிதோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன்’ என்பதற்கு முன்னால்)லி யிசிறிய கண்களும் சப்பை மூக்குகளும் உள்ளன என்னும் சொற்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال الزهري عن سعيد بن المسيب، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى تقاتلوا قوما نعالهم الشعر، ولا تقوم الساعة حتى تقاتلوا قوما كان وجوههم المجان المطرقة ". قال سفيان وزاد فيه ابو الزناد عن الاعرج عن ابي هريرة، رواية " صغار الاعين، ذلف الانوف، كان وجوههم المجان المطرقة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2929
- Book Index
- 142
Grades
- -
