ஹதீஸ்கள்
#2924
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
உமைர் பின் அஸ்வத் அல் அன்ஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் (சிரியாவில் உள்ள) யிஹிம்ஸ்’ கடற்கரையில் தமது கட்டடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் எம்மிடம் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் முதலில் கடலில் (சென்று) அறப்போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள்” என்று கூறி னார்கள்.72 இதைச் செவியுற்ற நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அவர்களில் ஒருத் தியா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவர் தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் கைஸர் (சீசர்) உடைய நகரம் (கான்ஸ்டான்டி நோபிள்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.73 ‘‘அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثني اسحاق بن يزيد الدمشقي، حدثنا يحيى بن حمزة، قال حدثني ثور بن يزيد، عن خالد بن معدان، ان عمير بن الاسود العنسي، حدثه انه، اتى عبادة بن الصامت وهو نازل في ساحل حمص، وهو في بناء له ومعه ام حرام، قال عمير فحدثتنا ام حرام انها سمعت النبي صلى الله عليه وسلم يقول " اول جيش من امتي يغزون البحر قد اوجبوا ". قالت ام حرام قلت يا رسول الله انا فيهم. قال " انت فيهم ". ثم قال النبي صلى الله عليه وسلم " اول جيش من امتي يغزون مدينة قيصر مغفور لهم ". فقلت انا فيهم يا رسول الله. قال " لا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2924
- Book Index
- 137
Grades
- -
