ஹதீஸ்கள்
#2915
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, ‘‘இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகின்றேன். இறைவா! உனது நாட்டம் (முஸ்லிம்களாகிய நாங்கள் தோற்றுப்போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வழிபடுவது நின்றுபோய்விடும். (மக்கள் பொய்த் தெய்வங்களையே வழிபட்டுக்கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி மன்றாடிப்) பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘போதும், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு ‘‘இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்க ளிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” (54:45,46) எனும் குர்ஆன் வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில் பத்ர் போரின்போது என்னும் வாசகம் (அதிகப்படியாக) இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني محمد بن المثنى، حدثنا عبد الوهاب، حدثنا خالد، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم وهو في قبة " اللهم اني انشدك عهدك ووعدك، اللهم ان شيت لم تعبد بعد اليوم ". فاخذ ابو بكر بيده فقال حسبك يا رسول الله، فقد الححت على ربك، وهو في الدرع، فخرج وهو يقول {سيهزم الجمع ويولون الدبر * بل الساعة موعدهم والساعة ادهى وامر }. وقال وهيب حدثنا خالد يوم بدر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2915
- Book Index
- 128
Grades
- -
