ஹதீஸ்கள்
#2914
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில்) இருந்தேன். நான் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்தபோது இஹ்ராம் கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்க வில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரைமீதேறி அமர்ந்துகொண்டு என் சகாக்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் எடுத்துத் தர மறுத்துவிட்டார்கள். எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி அவர்களிடம் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு நானே அதை எடுத்துக்கொண்டு கழுதையின் மீது பாய்ச்சி அதைக் கொன்றுவிட்டேன். நபித்தோழர்களில் சிலர் அந்தக் கழுதையின் (சமைக்கப்பட்ட) இறைச்சியை உண்டார்கள். வேறுசிலர் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்தபொழுது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவுதான்” என்று பதிலளித் தார்கள்.66 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில், ‘‘அதன் இறைச்சி யில் மீதி ஏதும் உங்களிடம் உண்டா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2914
- Book Index
- 127
Grades
- -