ஹதீஸ்கள்
#2911
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு உஹுத் போர் நாளில் ஏற்பட்ட காயம் பற்றி என்னி டம் கேட்கப்பட்டது. நான், ‘‘நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. (அவர்களின்) தலைக் கவசம் அவர்களின் தலைமீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டி ருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் (தண்ணீரை) ஏந்திக்கொண்டிருந்தார்கள். இரத்தம் இன்னும் அதிகமாகிக்கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதை ஃபாத்திமா (ரலி) அவர்கள் பார்த்தபோது, ஒரு பாயை எடுத்து, அது சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு அதைக் காயத்தில் வைத்து அழுத்தி னார்கள். உடனே இரத்தம் (வெளியேறுவது) நின்றுவிட்டது” என்று கூறினேன்.62 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابيه، عن سهل رضى الله عنه انه سيل عن جرح النبي، صلى الله عليه وسلم يوم احد. فقال جرح وجه النبي صلى الله عليه وسلم وكسرت رباعيته وهشمت البيضة على راسه، فكانت فاطمة عليها السلام تغسل الدم وعلي يمسك، فلما رات ان الدم لا يزيد الا كثرة اخذت حصيرا فاحرقته حتى صار رمادا ثم الزقته، فاستمسك الدم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2911
- Book Index
- 124
Grades
- -
