ஹதீஸ்கள்
#2910
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் யிநஜ்த்’ நாட்டை நோக்கி அறப்போருக்காகச் சென்றேன்.61 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர் களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்துகொண்டிருந்தபோது மதிய ஓய்வுகொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கி னார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத் தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த் தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றுகொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக்கொண்டார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறை’லிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், யிஎன்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?› என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்” என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்குதான்) அமர்ந் திருந்தார். அவரை நபியவர்கள் தண்டிக்க வில்லை. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني سنان بن ابي سنان الدولي، وابو سلمة بن عبد الرحمن ان جابر بن عبد الله رضى الله عنهما اخبر انه، غزا مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد، فلما قفل رسول الله صلى الله عليه وسلم قفل معه، فادركتهم القايلة في واد كثير العضاه، فنزل رسول الله صلى الله عليه وسلم وتفرق الناس يستظلون بالشجر، فنزل رسول الله صلى الله عليه وسلم تحت سمرة وعلق بها سيفه ونمنا نومة، فاذا رسول الله صلى الله عليه وسلم يدعونا واذا عنده اعرابي فقال " ان هذا اخترط على سيفي وانا نايم، فاستيقظت وهو في يده صلتا ". فقال من يمنعك مني فقلت " الله ". ثلاثا ولم يعاقبه وجلس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2910
- Book Index
- 123
Grades
- -
