ஹதீஸ்கள்
#2908
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாகவும் வீரமிக்கவர்களாக வும் இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சப்தம் வந்த திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்துவிட்டு அபூதல்ஹா (ரலி) அவர் களின் சேணம் பூட்டப்படாத குதிரைமீது அமர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக்கொண்டி ருந்தது. அவர்கள், ‘‘பயப்படாதீர்கள். பயப்படா தீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பிறகு, ‘‘நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகக் கண்டோம்” என்று கூறினார்கள். அல்லது, ‘‘இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم احسن الناس واشجع الناس، ولقد فزع اهل المدينة ليلة فخرجوا نحو الصوت فاستقبلهم النبي صلى الله عليه وسلم وقد استبرا الخبر، وهو على فرس لابي طلحة عرى وفي عنقه السيف وهو يقول " لم تراعوا لم تراعوا ". ثم قال " وجدناه بحرا ". او قال " انه لبحر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2908
- Book Index
- 121
Grades
- -
