ஹதீஸ்கள்
#2903
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் முன்வாய்ப் பற்களில் (கீழ்வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்துகொண்டிருந் தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் காயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின்மேல் வைத்து அழுத்திவிட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது. அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، حدثنا يعقوب بن عبد الرحمن، عن ابي حازم، عن سهل، قال لما كسرت بيضة النبي صلى الله عليه وسلم على راسه وادمي وجهه، وكسرت رباعيته، وكان علي يختلف بالماء في المجن، وكانت فاطمة تغسله، فلما رات الدم يزيد على الماء كثرة عمدت الى حصير، فاحرقتها والصقتها على جرحه، فرقا الدم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2903
- Book Index
- 117
Grades
- -
