ஹதீஸ்கள்
#2901
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபிசீனியர்கள் (எத்தி யோப்பியர்கள்) நபி (ஸல்) அவர்கள் அருகில் தங்கள் ஈட்டிகளை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவர்கள்மீது எறிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமரே! அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. இரண்டாவது தொடர்களில், யிஇந்த விளையாட்டு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن الزهري، عن ابن المسيب، عن ابي هريرة رضى الله عنه قال بينا الحبشة يلعبون عند النبي صلى الله عليه وسلم بحرابهم دخل عمر، فاهوى الى الحصى فحصبهم بها. فقال " دعهم يا عمر ". وزاد علي حدثنا عبد الرزاق اخبرنا معمر في المسجد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2901
- Book Index
- 115
Grades
- -
