ஹதீஸ்கள்
#2899
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம் பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக்கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا حاتم بن اسماعيل، عن يزيد بن ابي عبيد، قال سمعت سلمة بن الاكوع رضى الله عنه قال مر النبي صلى الله عليه وسلم على نفر من اسلم ينتضلون فقال النبي صلى الله عليه وسلم " ارموا بني اسماعيل، فان اباكم كان راميا ارموا وانا مع بني فلان ". قال فامسك احد الفريقين بايديهم. فقال رسول الله صلى الله عليه وسلم " ما لكم لا ترمون ". قالوا كيف نرمي وانت معهم. قال النبي صلى الله عليه وسلم " ارموا فانا معكم كلكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2899
- Book Index
- 113
Grades
- -
