ஹதீஸ்கள்
#2897
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வர். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக் கப்படும். பிறகு இன்னொரு காலம் வரும். (அப்போதும் அறப்போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும். பிறகு மற்றொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் அறப்போருக் காகச் செல்வார்கள்.) அப்போது, ‘‘நபித் தோழர்களின் தோழருடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக் கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப் படும். உடனே அவர்களுக்கும் வெற்றி யளிக்கப்படும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، سمع جابرا، عن ابي سعيد الخدري رضى الله عنهم عن النبي صلى الله عليه وسلم قال " ياتي زمان يغزو فيام من الناس، فيقال فيكم من صحب النبي صلى الله عليه وسلم فيقال نعم. فيفتح عليه، ثم ياتي زمان فيقال فيكم من صحب اصحاب النبي صلى الله عليه وسلم فيقال نعم. فيفتح، ثم ياتي زمان فيقال فيكم من صحب صاحب اصحاب النبي صلى الله عليه وسلم فيقال نعم. فيفتح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2897
- Book Index
- 111
Grades
- -
