ஹதீஸ்கள்
#2827
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். ‘‘அல்லாஹ் வின் தூதரே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்” என்று நான் கேட்டேன். அப்போது சயீத் பின் அல்ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), ‘‘இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். உடனே நான், ‘‘இவர் (நுஅமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுத் போரில்) கொன்றவர்” என்று கூறினேன். அதற்கு சயீத் பின் அல்ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), ‘‘என்ன ஆச்சரி யம்! (தன் யிதவ்ஸ்’ குலத்தார் வசிக்கின்ற) ‘ளஃன்’ என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறைசொல்கிறதே! அந்த முஸ்லிமை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை” என்று கூறினார்.24 அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவுக்குப் பங்கு கொடுத்தார்களா, பங்கு கொடுக்கவில்லையா என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறுகிறார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள சயீதீ (ரஹ்) அவர்களின் (முழுப்) பெயர்: அம்ர் பின் யஹ்யா பின் சயீத் பின் அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا الزهري، قال اخبرني عنبسة بن سعيد، عن ابي هريرة رضى الله عنه قال اتيت رسول الله صلى الله عليه وسلم وهو بخيبر بعد ما افتتحوها، فقلت يا رسول الله اسهم لي. فقال بعض بني سعيد بن العاص لا تسهم له يا رسول الله. فقال ابو هريرة هذا قاتل ابن قوقل. فقال ابن سعيد بن العاص واعجبا لوبر تدلى علينا من قدوم ضان، ينعى على قتل رجل مسلم اكرمه الله على يدى ولم يهني على يديه. قال فلا ادري اسهم له ام لم يسهم له. قال سفيان وحدثنيه السعيدي عن جده عن ابي هريرة. قال ابو عبد الله السعيدي عمرو بن يحيى بن سعيد بن عمرو بن سعيد بن العاص
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2827
- Book Index
- 43
Grades
- -
