ஹதீஸ்கள்
#2801
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தார் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (ஹராம் பின் மில்ஹான், தம்முடன் வந்த தோழர்களிடம்), ‘‘உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் சரி; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென் றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்ப ளித்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டி ருந்தபோது, தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார். பிறகு, அவருடைய எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீது ஏறிக்கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர. அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள், ‘‘கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக்கொண்டார்) என்று (அறிவிக்கப்பட்ட தாகவே) நான் கருதுகிறேன்” என்று கூறுகிறார். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தாம் பெற்ற நற்பலனைக் குறித்து) திருப்தி கொள்ளும்படிச் செய்தான் என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். தன் (வெகுமதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்னும் இறைவசனத்தை ஓதிக்கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த பனூ உஸய்யா ஆகிய கூட்டத்தாருக்கெதிராக நாற்பது நாட்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்.12 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2801
- Book Index
- 18
Grades
- -