ஹதீஸ்கள்
#2800
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக்கொண்டே கண்விழித் தார்கள். நான், ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போன்று (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்துகொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) காட்டப்பட்டது” என்று கூறினார்கள். நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்ததைப் போன்றே செய்தார்கள். நானும் முன்பு கேட்டதைப் போன்றே கேட்டேன். முன்பு பதில் சொன்னதைப் போலவே அவர்களும் பதில் சொன்னார் கள். நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அவர்கள், ‘‘முதன் முதலாகச் செல்பவர் களில் நீங்களும் ஒருவர்தான்” என்று கூறினார்கள். (உம்மு ஹராம் (ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்:) அவ்வாறே, (தளபதி) முஆவியா (ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (கிழக்கு ரோமில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுடன் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். தமது படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் (சிரியா) நாட்டில் இறங்கினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் ஏறிக்கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக்கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.11 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال حدثني الليث، حدثنا يحيى، عن محمد بن يحيى بن حبان، عن انس بن مالك، عن خالته ام حرام بنت ملحان، قالت نام النبي صلى الله عليه وسلم يوما قريبا مني، ثم استيقظ يتبسم. فقلت ما اضحكك قال " اناس من امتي عرضوا على يركبون هذا البحر الاخضر، كالملوك على الاسرة ". قالت فادع الله ان يجعلني منهم. فدعا لها، ثم نام الثانية، ففعل مثلها، فقالت مثل قولها، فاجابها مثلها. فقالت ادع الله ان يجعلني منهم. فقال " انت من الاولين ". فخرجت مع زوجها عبادة بن الصامت غازيا اول ما ركب المسلمون البحر مع معاوية، فلما انصرفوا من غزوهم قافلين فنزلوا الشام، فقربت اليها دابة لتركبها فصرعتها فماتت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2800
- Book Index
- 17
Grades
- -
