ஹதீஸ்கள்
#2798
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார் கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பதுபோல் கூறலானார்கள்:) ‘‘ஸைத் பின் அல்ஹாரிஸா கொடியைப் பிடித்திருந்தார்; இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு ஜஅஃபர் அதைப் பற்றினார்; அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை அப்துல்லாஹ் பின் ரவாஹா பிடித்தார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு காலித் பின் அல்வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைப் பிடித்தார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது.10 (வீரமரணத்தால் அவர்கள் பெற்ற பெரும்பேற்றினை நாம் அறிந்தபிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது. லிஅறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள், அல்லது, ‘அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்லி இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அத்தியாயம் :
حدثنا يوسف بن يعقوب الصفار، حدثنا اسماعيل ابن علية، عن ايوب، عن حميد بن هلال، عن انس بن مالك رضى الله عنه قال خطب النبي صلى الله عليه وسلم فقال " اخذ الراية زيد فاصيب، ثم اخذها جعفر فاصيب، ثم اخذها عبد الله بن رواحة فاصيب، ثم اخذها خالد بن الوليد عن غير امرة ففتح له وقال ما يسرنا انهم عندنا ". قال ايوب او قال " ما يسرهم انهم عندنا ". وعيناه تذرفان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2798
- Book Index
- 16
Grades
- -
