ஹதீஸ்கள்
#2787
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் போராடுபவரின் நிலை யானது, லிஉண்மையாகப் போராடுபவர் யார் என்பது அல்லாஹ்வுக்கே தெரியும்லி (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும்வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரைச் சொர்க்கத்தில் அனுமதிக்கப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான். அல்லது நன்மையுடனோ போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்பவைக்கப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني سعيد بن المسيب، ان ابا هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " مثل المجاهد في سبيل الله والله اعلم بمن يجاهد في سبيله كمثل الصايم القايم، وتوكل الله للمجاهد في سبيله بان يتوفاه ان يدخله الجنة، او يرجعه سالما مع اجر او غنيمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2787
- Book Index
- 6
Grades
- -
