ஹதீஸ்கள்
#2786
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவழியில் தமது உயிராலும் தமது பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘பிறகு யார்?” என்று கேட்டார் கள். ‘‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக்கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني عطاء بن يزيد الليثي، ان ابا سعيد الخدري رضى الله عنه حدثه قال قيل يا رسول الله، اى الناس افضل فقال رسول الله صلى الله عليه وسلم " مومن يجاهد في سبيل الله بنفسه وماله ". قالوا ثم من قال " مومن في شعب من الشعاب يتقي الله، ويدع الناس من شره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2786
- Book Index
- 5
Grades
- -
