ஹதீஸ்கள்
#2785
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘அறப்போருக்கு ஈடான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி எதையும் நான் காணவில்லை” என்று கூறிவிட்டு, ‘‘அறப்போராளி (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபின், (அவருக்கு இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீர் உமது பள்ளிவாசலுக்குச் சென்று இடைவிடாமல் தொழுதுகொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக்கொண்டும் இருக்க உம்மால் முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘அது யாரால் முடியும்?” என்று பதிலளித்தார்.5 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: அறப்போராளியின் குதிரை, அதைக் கட்டிவைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக் கிடையே (கால்களை உதைத்துக்கொண்டு) சில தடவை குதித்துச் சென்றால் அதுவும் அவருக்கு நன்மையாக எழுதப்படும். அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، اخبرنا عفان، حدثنا همام، حدثنا محمد بن جحادة، قال اخبرني ابو حصين، ان ذكوان، حدثه ان ابا هريرة رضى الله عنه حدثه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال دلني على عمل يعدل الجهاد. قال " لا اجده قال هل تستطيع اذا خرج المجاهد ان تدخل مسجدك فتقوم ولا تفتر وتصوم ولا تفطر ". قال ومن يستطيع ذلك قال ابو هريرة ان فرس المجاهد ليستن في طوله فيكتب له حسنات
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2785
- Book Index
- 4
Grades
- -
