ஹதீஸ்கள்
#2782
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது” என்று கூறினார்கள். ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று நான் கேட்டேன் அவர்கள், ‘‘பிறகு தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இறைவழியில் அறப்போர் புரிவதாகும்” என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்குமேல்) வேறெதுவும் கேட்காமல் மௌனமாகிவிட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.2 அத்தியாயம் :
حدثنا الحسن بن صباح، حدثنا محمد بن سابق، حدثنا مالك بن مغول، قال سمعت الوليد بن العيزار، ذكر عن ابي عمرو الشيباني، قال قال عبد الله بن مسعود رضى الله عنه سالت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله اى العمل افضل قال " الصلاة على ميقاتها ". قلت ثم اى. قال " ثم بر الوالدين ". قلت ثم اى قال " الجهاد في سبيل الله ". فسكت عن رسول الله صلى الله عليه وسلم ولو استزدته لزادني
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2782
- Book Index
- 1
Grades
- -
