ஹதீஸ்கள்
#2737
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கைபரில் (‘ஸம்ஃக்’ என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததே இல்லை. ஆகவே, அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக்கொண்டு அதன் விளைச்சலைத் தர்மம் செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்களும், ‘‘அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது” என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்பவர் அதிலிருந்து நியாயமான அளவில் தாமும் உண்டு, சேகரித்து வைக்காமல், (படாடோபமாகச் செலவிடாமல்) பிறருக்கும் உணவளிப்பது குற்றமாகாது (என்றும் எழுதிவைத்தார்கள்.) அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا محمد بن عبد الله الانصاري، حدثنا ابن عون، قال انباني نافع، عن ابن عمر رضى الله عنهما ان عمر بن الخطاب، اصاب ارضا بخيبر، فاتى النبي صلى الله عليه وسلم يستامره فيها، فقال يا رسول الله، اني اصبت ارضا بخيبر، لم اصب مالا قط انفس عندي منه، فما تامر به قال " ان شيت حبست اصلها، وتصدقت بها ". قال فتصدق بها عمر انه لا يباع ولا يوهب ولا يورث، وتصدق بها في الفقراء وفي القربى، وفي الرقاب، وفي سبيل الله، وابن السبيل، والضيف، لا جناح على من وليها ان ياكل منها بالمعروف، ويطعم غير متمول. قال فحدثت به ابن سيرين فقال غير متاثل مالا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2737
- Book Index
- 24
Grades
- -
