ஹதீஸ்கள்
#2735
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப்பெண்) பரீரா, தனது விடு தலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்த (உதவி கோரி) என்னிடம் வந்தார். நான், ‘‘நீ விரும்பினால் உன் உரிமையாளர் களுக்கு (முழுத் தொகையையும்) நான் செலுத்திவிடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே இருக்க வேண்டும்” என்று கூறினேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது நான் இதை அவர்களிடம் கூறினேன். அவர்கள், ‘‘அவரை வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்த வருக்கே உரியது” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள். அவர்கள்), ‘‘மக்கள் சிலருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர்கள் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! யார் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن يحيى، عن عمرة، عن عايشة رضى الله عنها قالت اتتها بريرة تسالها في كتابتها، فقالت ان شيت اعطيت اهلك ويكون الولاء لي. فلما جاء رسول الله صلى الله عليه وسلم ذكرته ذلك قال النبي صلى الله عليه وسلم " ابتاعيها فاعتقيها، فانما الولاء لمن اعتق ". ثم قام رسول الله صلى الله عليه وسلم على المنبر فقال " ما بال اقوام يشترطون شروطا ليست في كتاب الله من اشترط شرطا ليس في كتاب الله فليس له، وان اشترط ماية شرط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2735
- Book Index
- 22
Grades
- -
