ஹதீஸ்கள்
#2733
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் பெண்களை (அவர்கள் இறை நம்பிக்கை யுடையவர்கள்தானா) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இணைவைப்பாளர்களின் மனைவிமார் களில் யாரெல்லாம் புலம்பெயர்ந்து வந்தார் களோ அவர்களுக்காக, அவர்களுடைய கணவன்மார்கள் செலவிட்ட (மஹ்ர்) தொகைளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படியும், இறைமறுப்பாளர் களான பெண்களுடன் முஸ்லிம்கள் திருமண பந்தம் வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிட்டபோது, உமர் (ரலி) அவர்கள், அபூஉமய்யாவின் மகள் கரீபாவையும், ஜர்வல் அல்குஸாயீ யின் மகளையும் (அவர்கள் இறைமறுப் பாளர்களாக இருந்த காரணத்தால்) மணவிலக்குச் செய்துவிட்டார்கள். ஆகவே, கரீபாவை முஆவியா பின் அபீசுஃப்யானும் மற்றொருவரை அபூ ஜஹ்மும் மணமுடித்துக்கொண்டார்கள். முஸ்லிம்கள் தம் மனைவியருக்குச் செலவிட்டதை, (மனைவியர் இறை மறுப்பாளர்களிடம் சென்றபின்) திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை இறைமறுப்பாளர்கள் ஏற்க மறுத்தனர். அப்போது, ‘‘உங்கள் மனைவியரில் ஒருவர் இறைமறுப்பாளர்களிடம் போய்ச் சேர்ந்துகொண்டபின், நீங்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றால் (இறைமறுப்பாளர்களிடம் சென்றுவிட்ட) மனைவியரின் கணவன்களுக்கு, அவர்கள் செலவிட்டதைப் போன்று கொடுத்துவிடுங்கள்” (60:11) எனும் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான். இங்கு யிபோர்ச்செல்வங்கள்’ என்பதைக் குறிக்க ‘அக்ப்’ (ஆகப்த்தும்) எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது, இறைமறுப்பாளர்களிடமிருந்து புலம்பெயர்ந்து (முஸ்லிம்களிடம்) வரும் (முஸ்லிம்) மனைவிக்கு முஸ்லிம் கணவன் வழங்கும் மணக்கொடையைக் குறிக்கும். அதாவது முஸ்லிம்களில் ஒருவருடைய மனைவி (மதம் மாறி இறைமறுப்பாளர்களிடம்) சென்றுவிட்டால், (அவளுக்காக) அவர் செலவிட்ட (மணக் கொடையான)து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஆணையிட் டான். அது, இறைமறுப்பாளர்களின் மனைவியரில் யார் (முஸ்லிம்களிடம்) புலம்பெயர்ந்து வருகிறாரோ (அவரை முஸ்லிம் மணமுடிக்கும்போது) அவருக்குத் தரும் மணக்கொடைக்கு ஈடானதாகும். ஆனால், புலம்பெயர்ந்துவந்த (முஸ்லிம்) பெண்களில் எவருமே இறைநம்பிக்கை கொண்ட பின்னால் இஸ்லாத்தை நிராகரித்துவிட்டு (மதம் மாறிச்) சென்றதாக நாம் அறியவில்லை. சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில் அபூபஸீர் பின் உசைத் அஸ்ஸகஃபீ அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, புலம்பெயர்ந்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்; அப்போது (குறைஷித் தலைவர்) அக்னஸ் பின் ஷரீக் என்பவர் அபூபஸீரை (மக்காவுக்குத்) திருப்பியனுப்பும்படி கேட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு (கடிதம்) எழுதினார் என நமக்குச் செய்தி எட்டியது...” என்று ஹதீஸ் முழுவதையும் சொன்னார்கள்.20 அத்தியாயம் :
وقال عقيل عن الزهري، قال عروة فاخبرتني عايشة، ان رسول الله صلى الله عليه وسلم كان يمتحنهن، وبلغنا انه لما انزل الله تعالى ان يردوا الى المشركين ما انفقوا على من هاجر من ازواجهم، وحكم على المسلمين، ان لا يمسكوا بعصم الكوافر، ان عمر طلق امراتين قريبة بنت ابي امية، وابنة جرول الخزاعي، فتزوج قريبة معاوية، وتزوج الاخرى ابو جهم، فلما ابى الكفار ان يقروا باداء ما انفق المسلمون على ازواجهم، انزل الله تعالى {وان فاتكم شىء من ازواجكم الى الكفار فعاقبتم} والعقب ما يودي المسلمون الى من هاجرت امراته من الكفار، فامر ان يعطى من ذهب له زوج من المسلمين ما انفق من صداق نساء الكفار اللايي هاجرن، وما نعلم احدا من المهاجرات ارتدت بعد ايمانها. وبلغنا ان ابا بصير بن اسيد الثقفي قدم على النبي صلى الله عليه وسلم مومنا مهاجرا في المدة، فكتب الاخنس بن شريق الى النبي صلى الله عليه وسلم يساله ابا بصير، فذكر الحديث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2733
- Book Index
- 20
Grades
- -
