ஹதீஸ்கள்
#2731
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகிய இருவரும் லி ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு லி கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) புறப்பட்டார்கள்.15 பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘காலித் பின் அல்வலீத், குறைஷியரின் குதிரைப் படையுடன் ‘அல்ஃகமீம்’ என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர்கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் அல்வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்றுவிடலாம்)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம்கள் வருவதை காலித் அறியவில்லை. (குறைஷி குதிரைப் படையினர் முஸ்லிம்களின்) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய கரும் புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் அல்வலீத், குறைஷியரை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், (‘அல்மிரார்’ எனும்) மலைப் பாதைக்கு வந்தார்கள். அங்கிருந்துதான் குறைஷியரைப் போய்ச் சேர முடியும். அங்கு நபியவர்களின் ஊர்தி ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்துகொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) யிஹல்ஹல்’ என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், யிகஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது, யிகஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது என்று கூறினார்கள்.16 நபி (ஸல்) அவர்கள், ‘‘கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. மாறாக, (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த (இறை)வனே அதையும் தடுத்துவைத்திருக் கின்றான்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘என் உயிர் யாரது கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களைக் கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் வழங்குவேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களைவிட்டுத் திரும்பி ஹுதைபியாவின் கோடியில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள். மக்கள் அதிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் எடுக்கலானார்கள். இறுதியில், அவர்கள் மீதி வைக்காமல் தண்ணீர் முழுவதையும் இறைத்து (அதைக் காலிசெய்து) விட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தாகம் எடுப்பதாக முறையிடப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி, அதைப் பள்ளத்தில் போடும்படி மக்களுக்கு உத்தரவிட் டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (பள்ளத்தில் அம்பைப் போட்டதும்) அதிலிருந்து அவர்களுக்காகத் தண்ணீர் பீறிட்டு வந்துகொண்டிருந்தது. அவர்கள் அங்கிருந்து புறப்படும்வரை (தண்ணீர் தாராளமாகக் கிடைத்துக்கொண்டிருந்தது). இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் அங்கு வந்தார். அவர்கள் யிதிஹாமா’வாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக் கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், ‘‘(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபியாவின் வற்றாத சுனைகளின் அருகே முகாமிட்டி ருக்க, அங்கே அவர்களை விட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் பால் தரும் தாய் ஒட்டகங்கள் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப்போகிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாம் யாருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். குறைஷியர் அடிக்கடி போரிட்டுக் களைத்துப்போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுடன் குறிப்பிட்ட காலத்திற்குச் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே குறுக்கே நிற்க வேண்டாம். நான் வெற்றி பெறும்போது, அவர்கள் விரும்பினால் மக்களெல்லாரும் (விரும்பி) ஏற்றுக்கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே அவர்களும் இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு (போரிலிருந்து) ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்தால், என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகும்வரை அவர்களுடன் உறுதியாகப் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவான்” என்று கூறினார்கள். அப்போது புதைல், ‘‘நீங்கள் சொல் வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப் பேன்” என்று கூறிவிட்டு குறைஷியரிடம் சென்று, ‘‘நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட் டோம். அதை உங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்று சொன்னார். அப்போது அவர்களிடையே இருந்த அறிவிலிகள், ‘‘அவரைக் குறித்து எங்க ளுக்கு நீங்கள் எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினர். அவர்களில் கருத்து உடையோர், ‘‘அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று கூறினர். புதைல், ‘‘அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உடனே (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, ‘‘என் சமுதாயத்தாரே! நீங்கள் (என்) தந்தையைப் போன்றவர்கள் (என்மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தனர். உர்வா, ‘‘நான் உங்கள் மகனைப் போன்றவன் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (நீங்கள் எங்கள் நலம் நாடுபவர்தான்)” என்று பதிலளித்தனர். மேலும் அவர், ‘‘நீங்கள் என்னைச் சந்தேகிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தனர். அப்போது உர்வா, ‘‘உக்காழ் (சந்தை)வாசிகளிடம் (போரில்) உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களி டம் கொண்டுவந்து நிறுத்தியதும் உங்களுக் குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தனர். அப்போது அவர், ‘‘முஹம்மத், உங்கள்முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்லவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘‘அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்” என்று கூறினர். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, ‘‘முஹம்மதே! உங்கள் சமுதாயத்தாரின் கதையை அடியோடு முடித்துவிட எண்ணுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபியர் எவரேனும் தம் சமுதாயத்தாரை பூண்டோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறு விதமான முடிவு ஏற்பட்டாலும் (குறைஷியர் வென்றுவிட்டாலும் அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக!17 பல முகங்களை (உங்கள் தோழர்களிடையே) பார்க்கிறேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களை விட்டுவிட்டு வெருண்டோடக்கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன்” என்று கூறினார்.18 (இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, ‘‘நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடிவிடுவோமா?” என்று (கோபத்து டன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, ‘‘இவர் யார்?” என்று கேட்டார். மக்கள் ‘அபூபக்ர்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, ‘‘நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக் கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை.19 அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் (தொடர்ந்து) பேசத்தொடங்கினார். நபி (ஸல்) அவர்களுடன் அவர் பேசும்போதெல்லாம் அவர்களின் தாடியை (அன்போடு) பிடித்தபடி இருந்தார். அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி (ஸல்) அவர்களின் தலைப் பக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்தபோதெல்லாம் முஃகீரா (ரலி) அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, ‘‘உன் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தாடியிலிருந்து எடு” என்று கூறியவண்ணமிருந்தார்கள். அப்போது உர்வா தமது தலையை உயர்த்தி, ‘‘இவர் யார்?” என்று கேட்க மக்கள், ‘‘இவர் முஃகீரா பின் ஷுஅபா” என்று கூறினார்கள். உடனே உர்வா, ‘‘மோசடிக்காரரே! நீர் மோசடி செய்தபோது (உம்மைத் தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?” என்று கேட்டார். முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் சேர்ந்து (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். (மன்னன் அனைவருக்கும் உதவித் தொகை அளித்தார். முஃகீராவை மட்டும் விட்டு விட்டார்.) அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர் களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முஃகீரா (ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்தபோது அவருடைய தந்தையின் சகோதரரான உர்வாதான், அவர்களை பிணைத்தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முஃகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், (நீர் அபகரித்துக் கொண்டுவந்த) பொருட்களோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியிருந்தார்கள். பிறகு உர்வா, நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தம் கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தமது கையில் பிடித்துத் தன் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்ளாமல் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொண்டனர்; நபியவர்கள் அங்கத் தூய்மை செய்யும்போது, அவர்கள் மிச்சம்வைத்த தண்ணீரைப் பிடித்து(தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோ டொருவர் சண்டை போட்டுக்கொண்டனர்; நபியவர்களுடன் அவர்கள் பேசும்போது தம் குரல்களைத் தாழ்த்திக்கொண்டனர். மேலும், நபியவர்களுக்குக் கண்ணியமளிக் கும் விதத்தில் அவர்களைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதைத் தவிர்த்தனர். (இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்து நேரடியாக அறிந்தபின்) உர்வா தம் தோழர்களிடம் சென்று, ‘‘என் சமுதாயத் தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசரிடமும், (பாரசீக மன்னர்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போன்று எந்த அரசருக்கும் அவருடைய தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால், அது அவருடைய தோழர்களில் ஒருவரது கையில்தான் விழும். அதை அவர் தமது முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரது கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் அங்கத் தூய்மை செய்தால் அவர் மிச்சம்வைக்கும் தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தம் குரல்களைத் தாழ்த்திக்கொள்கிறார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை. மேலும், அவர் உங்கள்முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே யிபனூ கினானா’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், ‘‘என்னை அவரிடம் செல்லவிடுங்கள்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், ‘‘சரி, செல்லுங்கள்” என்று கூறினர். அவர் நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது இன்ன மனிதர். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் பலி ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்து கின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவரிடம் ஒரு பலி ஒட்டகம் அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் யிதல்பியா’ கூறியபடி அவரை வரவேற்றார் கள். இதை அவர் கண்டவுடன், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) இவர்களை இறையில்லத்திற்கு வர விடாமல் தடுப்பது சரியில்லையே” என்று (தமக்குள்) கூறிக்கொண்டார். தம் தோழர் களிடம் அவர் திரும்பிச் சென்றபோது, ‘‘பலி ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற் றைக் கீறி அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத் திற்கு வர விடாமல் அவர்களைத் தடுப் பதை நான் சரியானதாகக் கருதவில்லை” என்று கூறினார். உடனே அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் எனப்படும் ஒரு மனிதர் எழுந்து, ‘‘என்னை அவரிடம் போக விடுங்கள்” என்று கூறினார். மக்காவாசிகள், ‘‘சரி, நீங்கள் அவரிடம் செல்லுங்கள்” என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் மிக்ரஸ்; இவர் ஒரு கெட்ட மனிதர்” என்று கூறினார்கள். அவர் (வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தார். அவர் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் பின் அம்ர் என்பவர் (குறைஷியரின் தரப்பிலிருந்து) வந்தார். அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சுஹைல் பின் அம்ர் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் விவகாரம் சுலபமாகிவிட்டது” என்று (யிசஹ்ல்’ என்னும் பொருள் (சுலபம்) கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததை நற்குறியாகக் கருதும் வகையில்) கூறினார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, ‘‘(ஏட்டைக்) கொண்டுவாருங்கள். உங்க ளுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) ஆவணம் ஒன்றை எழுதுவோம்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...› என்று (சமாதான ஒப்பந் தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். உடனே சுஹைல், ‘‘அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்)› என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், யிஇறைவா! உன் திருப்பெயரால்...› (பிஸ்மிகல்லாஹும்ம) என்று நீங்கள் முன்பு எழுதிவந்ததைப் போன்றே எழுதுக!” என்றார். முஸ்லிம்கள், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! அளவற்ற அருளாள னும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்றுதான் இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், யிஇறைவா! உன் திருப்பெயரால்’ (பிஸ்மிகல்லாஹும்ம) என்றே எழுதுங்கள் என்று சொன் னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், யிஇது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்’ என்று (எழுதும்படி) சொன்னார்கள். உடனே சுஹைல், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வர விடாமல் உங்களைத் தடுத்திருக்க வும்மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும்மாட்டோம். மாறாக, யிமுஹம்மத் பின் அப்தில்லாஹ்’ (அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்) என்றே எழுதுக!” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் என்னைப் பொய்யாளியாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர்தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் (அப்துல்லாஹ் வின் மகன் முஹம்மது) என்றே எழுதுங் கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தகராறு செய்யாமல் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் அவர்கள், ‘‘அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்ட (மக்கா நகரத்)தைக் கண்ணியப்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டா லும் அதை அவர்களுக்கு நான் வழங் காமல் இருக்கமாட்டேன்” என்று முன்பே சொல்லியிருந்ததுதான். பிறகு சுஹைலிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘எங்களை (இந்த ஆண்டு) இறையில் லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே சுஹைல், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களை அனுமதித்தால்) யிநாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்துவிட்டோம்’ என்று அரபியர் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்துகொள்ளலாம்” என்று கூறினார். அவ்வாறே (எழுத்தர்) எழுதினார். மேலும் சுஹைல், ‘‘எங்களிட மிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பிவிட வேண்டும்” என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஒருவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பாளர்களிடம் திருப்பி அனுப்புவது?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக்கொண்டிருக்கும்போதே (குறைஷியரின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்துவந்தார்கள். அவர் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே தஞ்சம் புகுந்தார். உடனே (அவருடைய தந்தை யான) சுஹைல், ‘‘முஹம்மதே! (ஒப்பந்தப் படி) முதலாவதாக, இதோ இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே” என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், ‘‘அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடன் ஒருபோதும் எந்தச் சமாதான ஒப்பந்தமும் செய்துகொள்ளமாட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப் பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், ‘‘நான் உங்களுக்கு அனுமதி தரமாட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக்கொள்ள எனக்கு அனுமதி யளியுங்கள்” என்று (மறுபடியும்) கூறினார்கள். அதற்கு சுஹைல், ‘‘நான் அனுமதியளிக்கப்போவதில்லை” என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், ‘‘நாம் உங்களுக்கு அதற்காக அனுமதியளித்துவிட்டோம்” என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், ‘‘முஸ்லிம் சமுதாயமே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணைவைப்பாளர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார். அப்போது (நடந்ததை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதர்தான்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘நாம் சத்தியத்திலும் நம் பகைவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அப்படி யானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக்கூடியவன்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘விரைவில் நாம் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வோம் என்று தாங்கள் எங்களுக்குச் சொல்லிவந்திருக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக் குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்ú”ô?” எனக் கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அங்கு தவாஃப் செய்வீர்கள்” என்று கூறினார்கள். பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களி டம் சென்று, ‘‘அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறினார்கள். நான், ‘‘நாம் சத்தியத்திலும் நம் பகைவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்றார்கள். நான், ‘‘அப்படியென்றால், (இந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டு) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யிமனிதரே! நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான். அவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்யமாட்டார்கள். அவனே அவர்களுக்கு உதவக்கூடியவன். அவர்களின் வழிகாட்டலை நீங்கள் கடைப்பிடியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘அவர்கள் நம்மிடம், யிநாம் இறையில்லத்திற்குச் சென்று அங்கு தவாஃப் செய்வோம்’ என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; (சொன்னார் கள்.) ஆனால், ‘நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்’ என்று உங்களிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் தொடர்ந்து சொன்னதாகக் கூறுகிறார்கள்: நான் இப்படி (அதிருப்தியுடன் நபி (ஸல்) அவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல நற்செயல்களைப் புரிந் தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, ‘‘எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலைமுடி களைந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணை யாக! அவர்களில் ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக் காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அனுபவத்தைச் சொன்னார்கள். அப்போது உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறு (உங்கள் உத்தரவுப்படி) மக்கள் நடக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? புறப்படுங்கள்; அவர்களில் யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசாதீர்கள். (முதலில்) நீங்கள் உங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுங்கள்; பிறகு உங்கள் நாவிதரை அழைத்து, உங்கள் தலைமுடியைக் களையுங்கள்” என்று (ஆலோசனை) கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்துகொண்டார்கள். அதுவரை அவர்களில் யாரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இதைக் கண்ட தோழர்களும் எழுந்து சென்று குர்பானி பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக்கொண்டு (பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென் றனர். பிறகு (சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த காலகட்டத்தில்) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ‘‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் புலம் பெயர்ந்து உங்களிடம் வந்தால், (அவர்கள் இறைநம்பிக்கையாளர்களா என்பதைச்) சோதித்துப்பாருங்கள். அவர்களின் நம்பிக்கை பற்றி அல்லாஹ்தான் நன்கறிவான். அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால் இறைமறுப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள். அவர்கள் இறைமறுப்பாளர்களுக்கு (மனைவியராக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். இறைமறுப்பாளர்களும் அவர்களுக்கு (கணவர்களாக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காகச்) செலவிட்டதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்பெண்களைத் திருமணம் செய்துகொள்வதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை; நீங்கள் அவர்களுக்குரிய மணக்கொடையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால். அப்போது இறைவனை மறுக்கும் பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக்கொள்ளாதீர்கள்” (60:10) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது உமர் (ரலி) அவர்கள், தம்முடைய இரு மனைவியரை மணவிலக்குச் செய்தார்கள். அவ்விருவரும் இணைவைப்பாளர்களாக இருந்தனர். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபீசுஃப்யான் அவர்களும் மற்றொருவரை ஸஃப்வான் பின் உமய்யா அவர்களும் மணமுடித்துக்கொண்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனா வுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷியரில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமான நிலையில் (மதீனாவுக்கு) வந்தார். எனவே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷியர் இரண்டு பேரை அனுப்பிவைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), ‘‘நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றுங்கள்” என்று கேட்டனர். உடனே அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர் களை அழைத்துக்கொண்டு யிதுல் ஹுலைஃபா’ எனும் இடத்தை அடைந்த னர். அவர்கள் தம் பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அப்போது அபூபஸீர் (ரலி) அவர்கள் அவ்விருவரில் ஒருவரிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதரே! உம்முடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்” என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப்பார்த்திருக்கிறேன். மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்” என்று சொன்னார். அபூபஸீர் அவர்கள், ‘‘எனக்கு (அதை)க் காட்டுவீராக!. அதை நான் பார்க்கிறேன்” என்று கேட்டு அவரைத் தம் வசத்தில் கொண்டுவந்து (அந்த வாளால்) குத்திக் கொன்றுவிட்டார். மற்றொருவர் வெருண்டோடி மதீனாவரை சென்றுவிட்டார்; ஓடிக்கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, ‘‘இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டுவிட்டிருக்கிறார்” என்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நின்றபோது, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் நண்பர் கொல்லப்பட்டுவிட்டார். (நீங்கள் அபூ பஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டுவிடுவேன்” என்று கூறினார். அப்போது அபூபஸீர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களது பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான். நீங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவருடைய தாய்க்குக் கேடுதான்! (உதவு பவர்) எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்” என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் (ரலி) அவர்கள், தம்மை (மீண்டும்) குறைஷியரிடம் நபியவர்கள் திருப்பியனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென் றார்கள். சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) அவர்களும் குறைஷியரிடமிருந்து தப்பியோடி அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். பிறகு குறைஷியரில் யார் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்துகொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்றுதிரண்டு விட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் (சிரியா) நாட்டை நோக்கி குறைஷியரின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களு டைய செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப் பறித்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே, குறைஷியர், நபி (ஸல்) அவர்களுக்கு ஆளனுப்பி, (அபூபஸீரும் அவருடைய சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) அவர்களுக்கு ஆணை அனுப்பும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் கேட்டுக்கொண்டனர். மேலும், ‘‘குறைஷியரில் யார் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தாலும் அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்)” என்றும் கூறிவிட்டனர். அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘அவர்கள்மீது உங்களுக்கு அவன் வெற்றி அளித்தபின், அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் உங்கள் கைகள் அவர்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்...” என்று தொடங்கி, ‘‘(ஏக இறையை) மறுத்துவிட்ட வர்கள் தம் உள்ளங்களில் வைராக்கியத்தை அறியாமைக் கால வைராக்கியத்தை, ஏற்படுத்திக்கொண்டனர்” (48:24லி26) என்பது வரையிலான வசனங்களை அருளினான். அந்த இறைமறுப்பாளர்களின் வைராக்கியம் என்னவென்றால், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதை அவர்கள் (பிடிவாதமாக) ஏற்கவில்லை; அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடை யோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் (பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்) என்பதையும் அவர்கள் ஏற்கவில்லை; முஸ்லிம்களை இறையில்லம் கஅபாவுக் குள் நுழைய விடாமல் தடுத்தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (48:25ஆவது வசனத்தில் யிதுன்பம்’ என்பதைக் குறிக்க) யிமஅர்ரத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘அல்உர்ரு’ என்பதிலிருந்து வந்தது. இதற்கு யிசொறிசிரங்கு’ என்பது சொற்பொருளாகும். (அதே வசனத்தில, ‘அவர்கள் பிரிந்திருந்தால்’ என்பதைக் குறிக்க) யிதஸய்யலூ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிதனியாக விலகியிருந்தால்’ என்பது பொருளாகும். (48:26 ஆவது வசனத்தில், வைராக்கியம் அல்லது வரட்டுப் பிடிவாதம் என்பதைக் குறிக்க) யிஹமிய்யத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு தடுத்தல், நுழைய விடாமல் வேலி அமைத்தல் என்பன பொருள்களாகும். ஒருவர்மீது கோபப்படுவதற்கும் இச்சொல் ஆளப்படுவதுண்டு. அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، قال اخبرني الزهري، قال اخبرني عروة بن الزبير، عن المسور بن مخرمة، ومروان، يصدق كل واحد منهما حديث صاحبه قال خرج رسول الله صلى الله عليه وسلم زمن الحديبية، حتى كانوا ببعض الطريق قال النبي صلى الله عليه وسلم " ان خالد بن الوليد بالغميم في خيل لقريش طليعة فخذوا ذات اليمين ". فوالله ما شعر بهم خالد حتى اذا هم بقترة الجيش، فانطلق يركض نذيرا لقريش، وسار النبي صلى الله عليه وسلم حتى اذا كان بالثنية التي يهبط عليهم منها، بركت به راحلته. فقال الناس حل حل. فالحت، فقالوا خلات القصواء، خلات القصواء. فقال النبي صلى الله عليه وسلم " ما خلات القصواء، وما ذاك لها بخلق، ولكن حبسها حابس الفيل، ثم قال والذي نفسي بيده لا يسالوني خطة يعظمون فيها حرمات الله الا اعطيتهم اياها ". ثم زجرها فوثبت، قال فعدل عنهم حتى نزل باقصى الحديبية، على ثمد قليل الماء يتبرضه الناس تبرضا، فلم يلبثه الناس حتى نزحوه، وشكي الى رسول الله صلى الله عليه وسلم العطش، فانتزع سهما من كنانته، ثم امرهم ان يجعلوه فيه، فوالله ما زال يجيش لهم بالري حتى صدروا عنه، فبينما هم كذلك، اذ جاء بديل بن ورقاء الخزاعي في نفر من قومه من خزاعة، وكانوا عيبة نصح رسول الله صلى الله عليه وسلم من اهل تهامة، فقال اني تركت كعب بن لوى وعامر بن لوى نزلوا اعداد مياه الحديبية، ومعهم العوذ المطافيل، وهم مقاتلوك وصادوك عن البيت. فقال رسول الله صلى الله عليه وسلم " انا لم نجي لقتال احد، ولكنا جينا معتمرين، وان قريشا قد نهكتهم الحرب، واضرت بهم، فان شاءوا ماددتهم مدة، ويخلوا بيني وبين الناس، فان اظهر فان شاءوا ان يدخلوا فيما دخل فيه الناس فعلوا، والا فقد جموا، وان هم ابوا فوالذي نفسي بيده، لاقاتلنهم على امري هذا حتى تنفرد سالفتي، ولينفذن الله امره ". فقال بديل سابلغهم ما تقول. قال فانطلق حتى اتى قريشا قال انا قد جيناكم من هذا الرجل، وسمعناه يقول قولا، فان شيتم ان نعرضه عليكم فعلنا، فقال سفهاوهم لا حاجة لنا ان تخبرنا عنه بشىء. وقال ذوو الراى منهم هات ما سمعته يقول. قال سمعته يقول كذا وكذا، فحدثهم بما قال النبي صلى الله عليه وسلم. فقام عروة بن مسعود فقال اى قوم الستم بالوالد قالوا بلى. قال اولست بالولد قالوا بلى. قال فهل تتهموني. قالوا لا. قال الستم تعلمون اني استنفرت اهل عكاظ، فلما بلحوا على جيتكم باهلي وولدي ومن اطاعني قالوا بلى. قال فان هذا قد عرض لكم خطة رشد، اقبلوها ودعوني اته. قالوا ايته. فاتاه فجعل يكلم النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم نحوا من قوله لبديل، فقال عروة عند ذلك اى محمد، ارايت ان استاصلت امر قومك هل سمعت باحد من العرب اجتاح اهله قبلك وان تكن الاخرى، فاني والله لارى وجوها، واني لارى اوشابا من الناس خليقا ان يفروا ويدعوك. فقال له ابو بكر امصص بظر اللات، انحن نفر عنه وندعه فقال من ذا قالوا ابو بكر. قال اما والذي نفسي بيده لولا يد كانت لك عندي لم اجزك بها لاجبتك. قال وجعل يكلم النبي صلى الله عليه وسلم فكلما تكلم اخذ بلحيته، والمغيرة بن شعبة قايم على راس النبي صلى الله عليه وسلم ومعه السيف وعليه المغفر، فكلما اهوى عروة بيده الى لحية النبي صلى الله عليه وسلم ضرب يده بنعل السيف، وقال له اخر يدك عن لحية رسول الله صلى الله عليه وسلم. فرفع عروة راسه فقال من هذا قالوا المغيرة بن شعبة. فقال اى غدر، الست اسعى في غدرتك وكان المغيرة صحب قوما في الجاهلية، فقتلهم، واخذ اموالهم، ثم جاء فاسلم فقال النبي صلى الله عليه وسلم " اما الاسلام فاقبل، واما المال فلست منه في شىء ". ثم ان عروة جعل يرمق اصحاب النبي صلى الله عليه وسلم بعينيه. قال فوالله ما تنخم رسول الله صلى الله عليه وسلم نخامة الا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده، واذا امرهم ابتدروا امره، واذا توضا كادوا يقتتلون على وضويه، واذا تكلم خفضوا اصواتهم عنده، وما يحدون اليه النظر تعظيما له، فرجع عروة الى اصحابه، فقال اى قوم، والله لقد وفدت على الملوك، ووفدت على قيصر وكسرى والنجاشي والله ان رايت ملكا قط، يعظمه اصحابه ما يعظم اصحاب محمد صلى الله عليه وسلم محمدا، والله ان تنخم نخامة الا وقعت في كف رجل منهم، فدلك بها وجهه وجلده، واذا امرهم ابتدروا امره واذا توضا كادوا يقتتلون على وضويه، واذا تكلم خفضوا اصواتهم عنده، وما يحدون اليه النظر تعظيما له، وانه قد عرض عليكم خطة رشد، فاقبلوها. فقال رجل من بني كنانة دعوني اته. فقالوا ايته. فلما اشرف على النبي صلى الله عليه وسلم واصحابه، قال رسول الله صلى الله عليه وسلم " هذا فلان، وهو من قوم يعظمون البدن فابعثوها له ". فبعثت له واستقبله الناس يلبون، فلما راى ذلك قال سبحان الله ما ينبغي لهولاء ان يصدوا عن البيت، فلما رجع الى اصحابه قال رايت البدن قد قلدت واشعرت، فما ارى ان يصدوا عن البيت. فقام رجل منهم يقال له مكرز بن حفص. فقال دعوني اته. فقالوا ايته. فلما اشرف عليهم قال النبي صلى الله عليه وسلم " هذا مكرز وهو رجل فاجر ". فجعل يكلم النبي صلى الله عليه وسلم، فبينما هو يكلمه اذ جاء سهيل بن عمرو. قال معمر فاخبرني ايوب عن عكرمة، انه لما جاء سهيل بن عمرو قال النبي صلى الله عليه وسلم " لقد سهل لكم من امركم ". قال معمر قال الزهري في حديثه فجاء سهيل بن عمرو فقال هات، اكتب بيننا وبينكم كتابا، فدعا النبي صلى الله عليه وسلم الكاتب، فقال النبي صلى الله عليه وسلم " بسم الله الرحمن الرحيم ". قال سهيل اما الرحمن فوالله ما ادري ما هو ولكن اكتب باسمك اللهم. كما كنت تكتب. فقال المسلمون والله لا نكتبها الا بسم الله الرحمن الرحيم. فقال النبي صلى الله عليه وسلم " اكتب باسمك اللهم ". ثم قال " هذا ما قاضى عليه محمد رسول الله ". فقال سهيل والله لو كنا نعلم انك رسول الله ما صددناك عن البيت ولا قاتلناك، ولكن اكتب محمد بن عبد الله. فقال النبي صلى الله عليه وسلم " والله اني لرسول الله وان كذبتموني. اكتب محمد بن عبد الله ". قال الزهري وذلك لقوله " لا يسالوني خطة يعظمون فيها حرمات الله الا اعطيتهم اياها ". فقال له النبي صلى الله عليه وسلم " على ان تخلوا بيننا وبين البيت فنطوف به ". فقال سهيل والله لا تتحدث العرب انا اخذنا ضغطة ولكن ذلك من العام المقبل فكتب. فقال سهيل وعلى انه لا ياتيك منا رجل، وان كان على دينك، الا رددته الينا. قال المسلمون سبحان الله كيف يرد الى المشركين وقد جاء مسلما فبينما هم كذلك اذ دخل ابو جندل بن سهيل بن عمرو يرسف في قيوده، وقد خرج من اسفل مكة، حتى رمى بنفسه بين اظهر المسلمين. فقال سهيل هذا يا محمد اول ما اقاضيك عليه ان ترده الى. فقال النبي صلى الله عليه وسلم " انا لم نقض الكتاب بعد ". قال فوالله اذا لم اصالحك على شىء ابدا. قال النبي صلى الله عليه وسلم " فاجزه لي ". قال ما انا بمجيزه لك. قال " بلى، فافعل ". قال ما انا بفاعل. قال مكرز بل قد اجزناه لك. قال ابو جندل اى معشر المسلمين، ارد الى المشركين وقد جيت مسلما الا ترون ما قد لقيت وكان قد عذب عذابا شديدا في الله. قال فقال عمر بن الخطاب فاتيت نبي الله صلى الله عليه وسلم فقلت الست نبي الله حقا قال " بلى ". قلت السنا على الحق وعدونا على الباطل قال " بلى ". قلت فلم نعطي الدنية في ديننا اذا قال " اني رسول الله، ولست اعصيه وهو ناصري ". قلت اوليس كنت تحدثنا انا سناتي البيت فنطوف به قال " بلى، فاخبرتك انا ناتيه العام ". قال قلت لا. قال " فانك اتيه ومطوف به ". قال فاتيت ابا بكر فقلت يا ابا بكر، اليس هذا نبي الله حقا قال بلى. قلت السنا على الحق وعدونا على الباطل قال بلى. قلت فلم نعطي الدنية في ديننا اذا قال ايها الرجل، انه لرسول الله صلى الله عليه وسلم وليس يعصي ربه وهو ناصره، فاستمسك بغرزه، فوالله انه على الحق. قلت اليس كان يحدثنا انا سناتي البيت ونطوف به قال بلى، افاخبرك انك تاتيه العام قلت لا. قال فانك اتيه ومطوف به. قال الزهري قال عمر فعملت لذلك اعمالا. قال فلما فرغ من قضية الكتاب قال رسول الله صلى الله عليه وسلم لاصحابه " قوموا فانحروا، ثم احلقوا ". قال فوالله ما قام منهم رجل حتى قال ذلك ثلاث مرات، فلما لم يقم منهم احد دخل على ام سلمة، فذكر لها ما لقي من الناس. فقالت ام سلمة يا نبي الله، اتحب ذلك اخرج ثم لا تكلم احدا منهم كلمة حتى تنحر بدنك، وتدعو حالقك فيحلقك. فخرج فلم يكلم احدا منهم، حتى فعل ذلك نحر بدنه، ودعا حالقه فحلقه. فلما راوا ذلك، قاموا فنحروا، وجعل بعضهم يحلق بعضا، حتى كاد بعضهم يقتل بعضا غما، ثم جاءه نسوة مومنات فانزل الله تعالى {يا ايها الذين امنوا اذا جاءكم المومنات مهاجرات فامتحنوهن} حتى بلغ {بعصم الكوافر} فطلق عمر يوميذ امراتين كانتا له في الشرك، فتزوج احداهما معاوية بن ابي سفيان، والاخرى صفوان بن امية، ثم رجع النبي صلى الله عليه وسلم الى المدينة، فجاءه ابو بصير رجل من قريش وهو مسلم فارسلوا في طلبه رجلين، فقالوا العهد الذي جعلت لنا. فدفعه الى الرجلين، فخرجا به حتى بلغا ذا الحليفة، فنزلوا ياكلون من تمر لهم، فقال ابو بصير لاحد الرجلين والله اني لارى سيفك هذا يا فلان جيدا. فاستله الاخر فقال اجل، والله انه لجيد، لقد جربت به ثم جربت. فقال ابو بصير ارني انظر اليه، فامكنه منه، فضربه حتى برد، وفر الاخر، حتى اتى المدينة، فدخل المسجد يعدو. فقال رسول الله صلى الله عليه وسلم حين راه " لقد راى هذا ذعرا ". فلما انتهى الى النبي صلى الله عليه وسلم قال قتل والله صاحبي واني لمقتول، فجاء ابو بصير فقال يا نبي الله، قد والله اوفى الله ذمتك، قد رددتني اليهم ثم انجاني الله منهم. قال النبي صلى الله عليه وسلم " ويل امه مسعر حرب، لو كان له احد ". فلما سمع ذلك عرف انه سيرده اليهم، فخرج حتى اتى سيف البحر. قال وينفلت منهم ابو جندل بن سهيل، فلحق بابي بصير، فجعل لا يخرج من قريش رجل قد اسلم الا لحق بابي بصير، حتى اجتمعت منهم عصابة، فوالله ما يسمعون بعير خرجت لقريش الى الشام الا اعترضوا لها، فقتلوهم، واخذوا اموالهم، فارسلت قريش الى النبي صلى الله عليه وسلم تناشده بالله والرحم لما ارسل، فمن اتاه فهو امن، فارسل النبي صلى الله عليه وسلم اليهم، فانزل الله تعالى {وهو الذي كف ايديهم عنكم وايديكم عنهم ببطن مكة من بعد ان اظفركم عليهم} حتى بلغ {الحمية حمية الجاهلية} وكانت حميتهم انهم لم يقروا انه نبي الله، ولم يقروا ببسم الله الرحمن الرحيم، وحالوا بينهم وبين البيت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2731
- Book Index
- 19
Grades
- -
