ஹதீஸ்கள்
#2729
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்) பரீரா என்னிடம் வந்து, ‘‘நான் என் உரிமையாளர்களிடம் ஒவ்வோர் ஆண்டும் ஓர் யிஊக்கியா’ வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் தருவதாகக் கூறி விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள் ளேன். ஆகவே, எனக்கு உதவி செய்யுங் கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘‘அவர்கள் விரும்பினால் (ரொக்கமாக) நான் ஒன்பது ஊக்கியாக்களையும் (எண்ணிக்) கொடுத்துவிடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே சேர வேண்டும்” என்று கூறினேன். பரீரா, அவருடைய உரிமையாளர்களிடம் சென்று அவர்களிடம் இதைக் கூறினார். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து (திரும்பி) வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) அமர்ந்திருந்தார்கள். (என்னிடம்) பரீரா, ‘‘நான் நீங்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன்; அவர்கள், வாரிசுரிமை தங்களுக்கே வேண்டும் என்று கூறி உங்கள் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதைச் செவியுற்றுக் கொண்டிருந்ததால், நான் நபி (ஸல்) அவர்களுக்கு விவரத்தைக் கூறினேன். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘பரீராவை நீ வாங்கிக்கொண்டு, அவரது வாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று நிபந்தனையிடு (பின்னர் பார்த்துக்கொள்வோம்). ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்” என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் அவர்கள் விதிக்கிறார்களே! இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாது; அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ் வின் நிபந்தனையே உறுதியானதாகும். (அடிமையின்) வாரிசுரிமை (அவனை) விடுதலை செய்தவருக்கே உரியதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت جاءتني بريرة فقالت كاتبت اهلي على تسع اواق في كل عام اوقية، فاعينيني. فقالت ان احبوا ان اعدها لهم، ويكون ولاوك لي فعلت. فذهبت بريرة الى اهلها، فقالت لهم، فابوا عليها، فجاءت من عندهم ورسول الله صلى الله عليه وسلم جالس، فقالت اني قد عرضت ذلك عليهم فابوا الا ان يكون الولاء لهم. فسمع النبي صلى الله عليه وسلم فاخبرت عايشة النبي صلى الله عليه وسلم فقال " خذيها واشترطي لهم الولاء، فانما الولاء لمن اعتق ". ففعلت عايشة، ثم قام رسول الله صلى الله عليه وسلم في الناس، فحمد الله واثنى عليه، ثم قال " ما بال رجال يشترطون شروطا ليست في كتاب الله ما كان من شرط ليس في كتاب الله فهو باطل، وان كان ماية شرط، قضاء الله احق، وشرط الله اوثق، وانما الولاء لمن اعتق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2729
- Book Index
- 17
Grades
- -
