ஹதீஸ்கள்
#2728
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘இறைத்தூதரான மூசா (அலை) அவர்கள்” என்று தொடங்கி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மூசா (அலை) அவர்கள் தொடர்பாகக்) கூறிய முழு ஹதீஸையும் சொல்லத் தொடங்கினார்கள்: களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று உங்களிடம் நான் கூற வில்லையா?” என்று (மூசா (அலை) அவர்களை நோக்கிக்) கேட்டார்கள் (18:72). (மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களின் நடவடிக்கைகளை ஆட்சே பித்து) முதல் முறையாகக் கேட்டது மறதியால் கேட்டதாகும்; நடுவில் சொன்னது அவர் விதித்த நிபந்தனையாகும்; மூன்றாவது முறை கேட்டது, வேண்டுமென்றே செய்ததாகும்.14 (இது தொடர்பான இறைவசனங்கள் வருமாறு:) நான் மறந்துபோனதற்காக என்னை (திரும்பிப்போகச் சொல்லி)த் தண்டித்து விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள். (18:73) பிறகு இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தார்கள்; அப்போது, அவர் (களிர்) அவனைக் கொன்றுவிட்டார். (18:74) மேலும், அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள்... அங்கே கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டார்கள். உடனே அவர் (களிர்), அதைச் செப்பனிட்டு நிறுத்தி வைத்தார். (18:77) ‘‘அவர்களுக்கப்பால் (வராஅஹும்) ஓர் அரசன் இருந்தான்” (18:79) என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘அவர்களுக்கு முன்னால் (அமாமஹும்) ஓர் அரசன் இருந்தான்” என்று வாசித்துள்ளார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، ان ابن جريج، اخبره قال اخبرني يعلى بن مسلم، وعمرو بن دينار، عن سعيد بن جبير، يزيد احدهما على صاحبه وغيرهما قد سمعته يحدثه عن سعيد بن جبير قال انا لعند ابن عباس رضى الله عنهما قال حدثني ابى بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم " موسى رسول الله " فذكر الحديث {قال الم اقل انك لن تستطيع معي صبرا} كانت الاولى نسيانا، والوسطى شرطا، والثالثة عمدا {قال لا تواخذني بما نسيت ولا ترهقني من امري عسرا}. {لقيا غلاما فقتله} فانطلقا فوجدا جدارا يريد ان ينقض فاقامه. قراها ابن عباس امامهم ملك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2728
- Book Index
- 16
Grades
- -
