ஹதீஸ்கள்
#2727
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சந்தைக்கு வருவதற்கு முன்பு மொத்த) வியாபாரிகளை வழியில் எதிர்கொண்டு சரக்குகளை வாங்குவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். உள்ளூர்வாசி கிராமவாசிக்காக வாங்கித் தருவதையும், ஒரு பெண் தன் சகோதரிக்கு (சக்களத்திக்கு) மணவிலக்கு அளிக்கும்படி நிபந்தனையிடுவதை யும், தம் சகோதரன் விலை பேசும் அதே பொருளை, ஒருவர் தாமும் விலை பேசுவதையும், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளுக்கு) அதிக விலை கேட்டு, (வேண்டுமென்றே) விலை ஏற்றிவிடுவதையும், (ஆடு, மாடுகளின்) மடியை கனக்கச் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.13 இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சிலவற்றில், யிதடை செய்யப்பட்டது’ என்றும், வேறுசிலவற்றில் யிஎங்களுக்குத் தடை செய்யப்பட்டது’ என்றும், இன்னும் சிலவற்றில் யிதடை செய்தார்கள்’ என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن عرعرة، حدثنا شعبة، عن عدي بن ثابت، عن ابي حازم، عن ابي هريرة رضى الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن التلقي، وان يبتاع المهاجر للاعرابي، وان تشترط المراة طلاق اختها، وان يستام الرجل على سوم اخيه، ونهى عن النجش، وعن التصرية. تابعه معاذ وعبد الصمد عن شعبة. وقال غندر وعبد الرحمن نهي. وقال ادم نهينا. وقال النضر وحجاج بن منهال نهى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2727
- Book Index
- 15
Grades
- -
