ஹதீஸ்கள்
#2726
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக் கப்பட்டிருந்த அடிமைப் பெண்ணான பரீரா என்னிடம் வந்து, ‘‘இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையே! என் உரிமை யாளர்கள் என்னை விற்கப்போகிறார்கள். எனவே, என்னை நீங்கள் (விலைக்கு வாங்கி) விடுதலை செய்துவிடுங்கள்” என்று கூறினார். நான், ‘‘சரி (அப்படியே செய்வோம்)” என்று கூறினேன். அவர், ‘‘என் உரிமையாளர்கள், என் வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை யிடாமல் என்னை விற்கமாட்டார்கள்” என்றார். அதற்கு நான், ‘‘அப்படியென்றால். உன்(னை வாங்க வேண்டிய) தேவை எனக்கில்லை” என்று கூறினேன். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோதுலி அல்லது இந்தச் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோதுலி அவர்கள், ‘‘பரீராவின் விஷயம் என்ன?” என்று கேட்டுவிட்டு, ‘‘அவர்கள் விரும்பியதையெல்லாம் நிபந்தனையிட்டுக்கொள்ளட்டும். நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவரை வாங்கி விடுதலை செய்துவிட்டேன். அவருடைய உரிமையாளர்கள், ‘‘அவரது வாரிசுரிமை எங்களுக்கே உரியது” என்று நிபந்தனை விதித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا عبد الواحد بن ايمن المكي، عن ابيه، قال دخلت على عايشة رضى الله عنها قالت دخلت على بريرة وهى مكاتبة، فقالت يا ام المومنين اشتريني فان اهلي يبيعوني فاعتقيني قالت نعم. قالت ان اهلي لا يبيعوني حتى يشترطوا ولايي. قالت لا حاجة لي فيك. فسمع ذلك النبي صلى الله عليه وسلم او بلغه، فقال " ما شان بريرة فقال اشتريها فاعتقيها وليشترطوا ما شاءوا ". قالت فاشتريتها فاعتقتها، واشترط اهلها ولاءها، فقال النبي صلى الله عليه وسلم " الولاء لمن اعتق، وان اشترطوا ماية شرط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2726
- Book Index
- 14
Grades
- -
