ஹதீஸ்கள்
#2724
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படியே நீங்கள் எனக்குத் தீர்ப்ப ளிக்கும்படி நான் அல்லாஹ்வை முன்வைத்துத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்; அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி, ‘‘ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி (ஸல்) அவர்கள், ‘‘சொல்” என்று கூறினார்கள். அவர், ‘‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக் காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்த னர்” என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உம்மிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக்கொண்டாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.11 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2724
- Book Index
- 13
Grades
- -