ஹதீஸ்கள்
#2723
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம், வாங்கும் எண்ணமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம். தம் சகோதரர் (ஒருவர்) வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம். ஒரு பெண், தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்வதற்காக தன் சகோதரியை (சக்களத்தியை) மணவிலக்குச் செய்துவிடுமாறு (தன் கணவனிடம்) கேட்க வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا معمر، عن الزهري، عن سعيد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لا يبيع حاضر لباد، ولا تناجشوا، ولا يزيدن على بيع اخيه، ولا يخطبن على خطبته، ولا تسال المراة طلاق اختها لتستكفي اناءها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2723
- Book Index
- 12
Grades
- -
