ஹதீஸ்கள்
#2722
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளை களில் இந்தப் பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. ஆகவே, அவ்விதம் நிபந்தனையிட்டு, குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்பட்டோம். (வெள்ளிக் காசுகளான) திர்ஹங்களுக்குப் பகரமாக குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்படவில்லை.9 அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا ابن عيينة، حدثنا يحيى بن سعيد، قال سمعت حنظلة الزرقي، قال سمعت رافع بن خديج رضى الله عنه يقول كنا اكثر الانصار حقلا، فكنا نكري الارض، فربما اخرجت هذه ولم تخرج ذه، فنهينا عن ذلك، ولم ننه عن الورق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2722
- Book Index
- 11
Grades
- -
