ஹதீஸ்கள்
#2717
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணான) பரீரா, தனது விடுதலைப் பத்திரம் தொடர்பாக (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக) உதவி கேட்டு என்னிடம் வந்தார். அதுவரை தன் விடுதலைப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த தொகையில் எதையும் அவர் செலுத்தியிருக்கவில்லை. எனவே நான் அவரிடம், ‘‘நீ உன் உரிமையாளர் களிடம் திரும்பிச் சென்று, உனது விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உன் சார்பாக நான் செலுத்தி விடுவதாகவும் உன் வாரிசுரிமை எனக்கே உரியதாய் இருக்க வேண்டுமென்றும் அவர்கள் விரும்பினால் நான் அவ்வாறே செய்கிறேன் என்றும் சொல்” எனக் கூறினேன். பரீராவும் இதை அவர்களிடம் சொல்ல அவர்கள் அதை (ஏற்க) மறுத்துவிட்டனர். மேலும், ‘‘ஆயிஷா உன்னை விடுதலை செய்வதன் வாயிலாக (அல்லாஹ்விடம்) நன்மையை நாடியிருந்தால் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டனர். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நீ (பரீராவை) வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.4 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا الليث، عن ابن شهاب، عن عروة، ان عايشة، رضى الله عنها اخبرته ان بريرة جاءت عايشة تستعينها في كتابتها، ولم تكن قضت من كتابتها شييا، قالت لها عايشة ارجعي الى اهلك، فان احبوا ان اقضي عنك كتابتك، ويكون ولاوك لي فعلت. فذكرت ذلك بريرة الى اهلها فابوا وقالوا ان شاءت ان تحتسب عليك فلتفعل، ويكون لنا ولاوك. فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال لها " ابتاعي فاعتقي، فانما الولاء لمن اعتق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2717
- Book Index
- 6
Grades
- -
