ஹதீஸ்கள்
#2709
ஸஹீஹ் அல்-புகாரீ - Peacemaking
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை தம்மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். ஆகவே, நான் அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்குப் பதிலாகப் பேரீச்சங்கனிகளை எடுத்துக்கொள்ளும்படி சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக்கொள்வதால் (தமது) உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்னிடம்) தெரிவிப்பீராக!” என்று கூறினார்கள். (பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் உமர் (ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, ‘‘உன் (தந்தைக்குக்) கடன் கொடுத்தவர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். என் தந்தை யாருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்ததோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன். (அவ்வாறிருந்தும்) பதின்மூன்று யிவஸ்க்’ பேரீச்சங்கனிகள் எஞ்சிவிட்டன. யிஏழு வஸ்க்குகள் ‘அஜ்வா’ (எனும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், ஆறு யிவஸ்க்’குகள் யிலவ்ன்’ எனும் மற்ற வகைப் பேரீச்சம் பழங்களும்’, அல்லது யிஏழு யிவஸ்க்’குகள் லவ்னும் ஆறு வஸ்க்குகள் அஜ்வாவும் மீதமாகிவிட்டன. (அன்று) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘‘அபூபக்ரிடமும் உமரிடமும் சென்று தெரிவி” என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வளம் வேண்டி பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்துகொண்டோம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அஸ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் (ரலி) அவர்கள் பற்றியோ நபியவர்கள் சிரித்தது பற்றியோ அதில் குறிப்பு இல்லை. மேலும், என் தந்தை முப்பது யிவஸ்க்’குகள் கடனை விட்டுச்சென்றார் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், யிலுஹ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا عبد الوهاب، حدثنا عبيد الله، عن وهب بن كيسان، عن جابر بن عبد الله رضى الله عنهما قال توفي ابي وعليه دين، فعرضت على غرمايه ان ياخذوا التمر بما عليه، فابوا ولم يروا ان فيه وفاء، فاتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له، فقال " اذا جددته فوضعته في المربد اذنت رسول الله صلى الله عليه وسلم ". فجاء ومعه ابو بكر وعمر فجلس عليه، ودعا بالبركة ثم قال " ادع غرماءك، فاوفهم ". فما تركت احدا له على ابي دين الا قضيته، وفضل ثلاثة عشر وسقا سبعة عجوة، وستة لون او ستة عجوة وسبعة لون، فوافيت مع رسول الله صلى الله عليه وسلم المغرب فذكرت ذلك له فضحك فقال " ايت ابا بكر وعمر فاخبرهما ". فقالا لقد علمنا اذ صنع رسول الله صلى الله عليه وسلم ما صنع ان سيكون ذلك. وقال هشام عن وهب عن جابر صلاة العصر. ولم يذكر ابا بكر ولا ضحك، وقال وترك ابي عليه ثلاثين وسقا دينا. وقال ابن اسحاق عن وهب عن جابر صلاة الظهر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Peacemaking
- Hadith Index
- #2709
- Book Index
- 19
Grades
- -
