ஹதீஸ்கள்
#2708
ஸஹீஹ் அல்-புகாரீ - Peacemaking
ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி ஒருவருடன் எனக்கு (மதீனாவின்) ‘அல்ஹர்ரா’ எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாய் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாயிலிருந்தே எங்கள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சிவந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு உங்கள் அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோப மடைந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக் கூறினீர்கள்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத் தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளை எட்டும்வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவ்வாறு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அன்னாருடைய முழு உரிமையையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குமுன் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும் விதத்தில் ஸுபைர் (ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோபமூட்டியபோது ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். ‘‘ ‘(நபியே!) உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்குள் ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பால் தம் உள்ளங்களில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள் (4:65) எனும் வசனம் இது தொடர்பாகவே இறங்கியதாக நான் நினைக்கிறேன்” என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عروة بن الزبير، ان الزبير، كان يحدث انه خاصم رجلا من الانصار قد شهد بدرا الى رسول الله صلى الله عليه وسلم في شراج من الحرة كانا يسقيان به كلاهما فقال رسول الله صلى الله عليه وسلم للزبير " اسق يا زبير ثم ارسل الى جارك ". فغضب الانصاري فقال يا رسول الله ان كان ابن عمتك فتلون وجه رسول الله صلى الله عليه وسلم ثم قال " اسق ثم احبس حتى يبلغ الجدر ". فاستوعى رسول الله صلى الله عليه وسلم حينيذ حقه للزبير، وكان رسول الله صلى الله عليه وسلم قبل ذلك اشار على الزبير براى سعة له وللانصاري، فلما احفظ الانصاري رسول الله صلى الله عليه وسلم استوعى للزبير حقه في صريح الحكم. قال عروة قال الزبير والله ما احسب هذه الاية نزلت الا في ذلك {فلا وربك لا يومنون حتى يحكموك فيما شجر بينهم} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Peacemaking
- Hadith Index
- #2708
- Book Index
- 18
Grades
- -
