ஹதீஸ்கள்
#2700
ஸஹீஹ் அல்-புகாரீ - Peacemaking
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நிகழ்ச்சியின்போது6 நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் மூன்று அம்சங்களின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அவையாவன: 1. நபி (ஸல்) அவர்கள், இணைவைப் பாளர்களிடமிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை, அவர்களிடமே திருப்பி யனுப்பிவிட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்பமாட்டார்கள். 2. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாட்கள் (மட்டும்) தங்கலாம். 3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும். இந்தச் சமாதான ஒப்பந்தம் பேசப் பட்டுக்கொண்டிருந்தபோது அபூஜந்தல் (ரலி) அவர்கள், தமது (கால்) சங்கிலி களுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர் களிடமே அவரைத் திருப்பியனுப்பிவிட்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: முஅம்மல் (ரஹ்) அவர்கள் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பில் அபூஜந்தல் (ரலி) அவர்களைக் குறித்த நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை. அத்தியாயம் :
وقال موسى بن مسعود حدثنا سفيان بن سعيد، عن ابي اسحاق، عن البراء بن عازب رضى الله عنهما قال صالح النبي صلى الله عليه وسلم المشركين يوم الحديبية على ثلاثة اشياء على ان من اتاه من المشركين رده اليهم، ومن اتاهم من المسلمين لم يردوه، وعلى ان يدخلها من قابل ويقيم بها ثلاثة ايام، ولا يدخلها الا بجلبان السلاح السيف والقوس ونحوه. فجاء ابو جندل يحجل في قيوده فرده اليهم. قال لم يذكر مومل عن سفيان ابا جندل وقال الا بجلب السلاح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Peacemaking
- Hadith Index
- #2700
- Book Index
- 10
Grades
- -
