ஹதீஸ்கள்
#2698
ஸஹீஹ் அல்-புகாரீ - Peacemaking
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா குறைஷியரான)ஹுதைபியாக் காரர்களிடம் (ஹுதைபியா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டபோது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுதியவுடன், இணைவைப்பாளர்கள், ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள் (என்று சொல்லிவிட்டு, முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), ‘‘நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்கமாட்டோம்” என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘அதை அழித்து விடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘நான் அதை (ஒருபோதும்) அழிக்கப்போவதில்லை” என்று கூறி விட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அதை அழித்தார்கள். நானும் என் தோழர்களும் (மக்கா நகரில் அடுத்த ஆண்டு) மூன்று நாட்கள் தங்குவோம். அதில் நாங்கள், யிஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ உடன்தான் நுழைவோம் என்று அவர் களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மக்கள், ‘‘ஜுலுப்பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், யிஉறைக்கு உள்ளே இருக்கும் ஆயுதங்கள்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Peacemaking
- Hadith Index
- #2698
- Book Index
- 8
Grades
- -