ஹதீஸ்கள்
#2695
ஸஹீஹ் அல்-புகாரீ - Peacemaking
அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் கூறியதாவது: (ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவருடைய எதிரி எழுந்து நின்று, ‘‘இவர் சொன்னது உண்மையே. எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்தக் கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), ‘‘என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், யிஉன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், யிஉம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடி களும், ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும்தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும் ஆடுகளும் உம்மிடம் திருப்பித்தரப்பட வேண்டும்; உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ‘‘உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ், அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை அளித்தார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Peacemaking
- Hadith Index
- #2695
- Book Index
- 6
Grades
- -