ஹதீஸ்கள்
#2690
ஸஹீஹ் அல்-புகாரீ - Peacemaking
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். (அதன் பிறகும்) நபி (ஸல்) அவர்கள் வரவில்லை. ஆகவே, பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நபி (ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தடுக்கப்பட்டுள்ளார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. ஆகவே, தாங்கள் மக்களுக்கு(த் தலைமை தாங்கி)த் தொழுவிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘சரி, நீங்கள் விரும்பினால் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிப் பதற்காக) முன்னே சென்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்து வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டத் தொடங்கி, இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை யின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். அங்கே தமக்குப் பின்னே நபி (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுவிக்கும் படி கட்டளையிட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின் வாக்கில் நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்துகொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்தபின் மக்களை நோக்கி, ‘‘மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கிவிடுகிறீர்கள். பெண்கள்தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக் குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ்வே தூய்மையானவன்) என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்” என்று கூறிவிட்டு, ‘‘அபூபக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுவிக்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை” என்று பதிலளித்தார்கள்.2 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا ابو غسان، قال حدثني ابو حازم، عن سهل بن سعد رضى الله عنه ان اناسا، من بني عمرو بن عوف كان بينهم شىء، فخرج اليهم النبي صلى الله عليه وسلم في اناس من اصحابه يصلح بينهم، فحضرت الصلاة، ولم يات النبي صلى الله عليه وسلم، فجاء بلال، فاذن بلال بالصلاة، ولم يات النبي صلى الله عليه وسلم فجاء الى ابي بكر فقال ان النبي صلى الله عليه وسلم حبس، وقد حضرت الصلاة فهل لك ان توم الناس فقال نعم ان شيت. فاقام الصلاة فتقدم ابو بكر، ثم جاء النبي صلى الله عليه وسلم يمشي في الصفوف، حتى قام في الصف الاول، فاخذ الناس بالتصفيح حتى اكثروا، وكان ابو بكر لا يكاد يلتفت في الصلاة، فالتفت فاذا هو بالنبي صلى الله عليه وسلم وراءه فاشار اليه بيده، فامره يصلي كما هو، فرفع ابو بكر يده، فحمد الله، ثم رجع القهقرى وراءه حتى دخل في الصف، وتقدم النبي صلى الله عليه وسلم فصلى بالناس، فلما فرغ اقبل على الناس فقال " يا ايها الناس ما لكم اذا نابكم شىء في صلاتكم اخذتم بالتصفيح، انما التصفيح للنساء، من نابه شىء في صلاته فليقل سبحان الله، فانه لا يسمعه احد الا التفت، يا ابا بكر ما منعك حين اشرت اليك لم تصل بالناس ". فقال ما كان ينبغي لابن ابي قحافة ان يصلي بين يدى النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Peacemaking
- Hadith Index
- #2690
- Book Index
- 1
Grades
- -
