ஹதீஸ்கள்
#2648
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்னும் பெயருடைய) பெண்ணொருவர் திருடிவிட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரது கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரது கை துண்டிக்கப்பட்டது. (அவரைப் பற்றி) ‘‘அவர் அழகிய முறையில் பாவமீட்பு பெற்றார்; திருமண மும் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் (எங்களிடம்) வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை (அறிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.12 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني ابن وهب، عن يونس،. وقال الليث حدثني يونس، عن ابن شهاب، اخبرني عروة بن الزبير، ان امراة، سرقت في غزوة الفتح، فاتي بها رسول الله صلى الله عليه وسلم ثم امر فقطعت يدها. قالت عايشة فحسنت توبتها وتزوجت، وكانت تاتي بعد ذلك فارفع حاجتها الى رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2648
- Book Index
- 12
Grades
- -
