ஹதீஸ்கள்
#2637
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் எனக்கு, ஆயிஷா (ரலி) அவர்களை (சிலர் அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அவதூறு சொன்னவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்ன போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாரை (ஆயிஷா வை)ப் பிரிந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை கலப்பதற்காக வேண்டி அலீ (ரலி) அவர்களையும் உசாமா (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாற்காலிகமாக நின்றுபோயிருந்தது. உசாமா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தங்கள் துணைவியார். (அவரைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்த மாவை வளர்ப்பு ஆடு வந்து தின்கின்ற அளவுக்கு (அப்படியே) விட்டுவிட்டு உறங்கிவிடுகின்ற இள வயதுச் சிறுமி என்பதற்கு அதிகமாகக் குறைசொல்வதற்கு அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். (அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் வீட்டாரின் விஷயத் தில் எனக்கு (மன) வேதனை அளித்துவிட்ட ஒரு மனிதனுக்கு (அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சகனுக்கு) எதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேனோ அவரை (இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا حجاج، حدثنا عبد الله بن عمر النميري، حدثنا يونس،. وقال الليث حدثني يونس، عن ابن شهاب، قال اخبرني عروة، وابن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله، عن حديث، عايشة رضى الله عنها وبعض حديثهم يصدق بعضا، حين قال لها اهل الافك، فدعا رسول الله صلى الله عليه وسلم عليا واسامة حين استلبث الوحى يستامرهما في فراق اهله، فاما اسامة فقال اهلك ولا نعلم الا خيرا. وقالت بريرة ان رايت عليها امرا اغمصه اكثر من انها جارية حديثة السن تنام عن عجين اهلها، فتاتي الداجن فتاكله. فقال رسول الله صلى الله عليه وسلم " من يعذرنا من رجل بلغني اذاه في اهل بيتي فوالله ما علمت من اهلي الا خيرا، ولقد ذكروا رجلا ما علمت عليه الا خيرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2637
- Book Index
- 1
Grades
- -
