ஹதீஸ்கள்
#2619
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதரின் (தோள்)மீது, விற்கப்படுகின்ற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இந்த அங்கியை வாங்கிக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை யன்றும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள். பிறகு (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அதே போன்ற) பட்டு அங்கிகள் கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘இது குறித்துத் தாங்கள் வேறுவிதமாகக் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவாசிகளில் ஒருவரான தம் (பால்குடி) சகோதரருக்கு, அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பிவைத்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا خالد بن مخلد، حدثنا سليمان بن بلال، قال حدثني عبد الله بن دينار، عن ابن عمر رضى الله عنهما قال راى عمر حلة على رجل تباع فقال للنبي صلى الله عليه وسلم ابتع هذه الحلة تلبسها يوم الجمعة واذا جاءك الوفد. فقال " انما يلبس هذا من لا خلاق له في الاخرة ". فاتي رسول الله صلى الله عليه وسلم منها بحلل فارسل الى عمر منها بحلة. فقال عمر كيف البسها وقد قلت فيها ما قلت قال " اني لم اكسكها لتلبسها، تبيعها او تكسوها ". فارسل بها عمر الى اخ له من اهل مكة قبل ان يسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2619
- Book Index
- 51
Grades
- -
