ஹதீஸ்கள்
#2613
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு (ஒருமுறை) வந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, ‘‘நான் ஃபாத்திமா வின் வீட்டு வாசலில் பல வண்ணக் கோடுகள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், ‘‘அந்தத் திரைச் சீலையை என்ன செய்ய வேண்டும் என்று தாம் விரும்புவதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்துகொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பிவிடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن جعفر ابو جعفر، حدثنا ابن فضيل، عن ابيه، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال اتى النبي صلى الله عليه وسلم بيت فاطمة فلم يدخل عليها، وجاء علي فذكرت له ذلك فذكره للنبي صلى الله عليه وسلم قال " اني رايت على بابها سترا موشيا ". فقال " ما لي وللدنيا ". فاتاها علي فذكر ذلك لها فقالت ليامرني فيه بما شاء. قال ترسل به الى فلان. اهل بيت بهم حاجة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2613
- Book Index
- 46
Grades
- -
