ஹதீஸ்கள்
#2584
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகி யோர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக் கேற்றவாறு போற்றிப் புகழ்ந்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: இறைவாழ்த்துக்குப்பின்! (மக்களே!)உங்கள் சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப் பித் தந்துவிடலாமெனக் கருதுகிறேன். ஆகவே, உங்களில் யார் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்! யார், (இனி) அல்லாஹ் நமக்கு அளிக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கும்வரை தமது பங்கைத் தாமே வைத்துக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நாங்கள் உங்களுக்காக (போர்க் ûதிகளைத் திருப்பித் தந்துவிட) மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறோம்” என்று கூறினார்கள்.11 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، قال ذكر عروة ان المسور بن مخرمة، رضى الله عنهما ومروان اخبراه ان النبي صلى الله عليه وسلم حين جاءه وفد هوازن قام في الناس، فاثنى على الله بما هو اهله، ثم قال " اما بعد، فان اخوانكم جاءونا تايبين، واني رايت ان ارد اليهم سبيهم، فمن احب منكم ان يطيب ذلك فليفعل، ومن احب ان يكون على حظه حتى نعطيه اياه من اول ما يفيء الله علينا ". فقال الناس طيبنا لك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2584
- Book Index
- 18
Grades
- -
