ஹதீஸ்கள்
#2582
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அஸ்ரா பின் ஸாபித் அல் அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன்; அவர்கள் எனக்கு வாசனைப் பொருளைக் கொடுத்து, ‘‘அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக வழங்கப்படும்) வாசனைப் பொருளை மறுப்பதில்லை” என்றும் கூறினார். மேலும், ஸுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் வாசனைப் பொருளை மறுப்பதில்லை” என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا عزرة بن ثابت الانصاري، قال حدثني ثمامة بن عبد الله، قال دخلت عليه فناولني طيبا، قال كان انس رضى الله عنه لا يرد الطيب. قال وزعم انس ان النبي صلى الله عليه وسلم كان لا يرد الطيب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2582
- Book Index
- 17
Grades
- -
