ஹதீஸ்கள்
#2578
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பரீராவை (விலைக்கு) வாங்கிட விரும்பினேன். அவ(ருடைய உரிமையாள)ர்கள் அவரது வாரிசுரிமை தமக்கே சேர வேண்டும் என்று நிபந்தனையிட் டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துச் சொல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்த வருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள். பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி நன்கொடையாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இது பரீரா அவர்களுக்குத் தர்மமாக வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள். மேலும், பரீரா (ரலி) அவர்கள் (தம் கணவரைப் பிரிந்துவிடுவது, அல்லது தொடர்ந்து அவருடன் வாழ்வது ஆகிய இரண்டில்) தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கப் பட்டார்கள். அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள், ‘‘(அப்போது) பரீரா (ரலி) அவர்களின் கணவர் சுதந்திர மானவராகவோ அடிமையாகவோ இருந்தார்” என்று குறிப்பிட்டார்கள். ‘‘நான் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், பரீரா (ரலி) அவர்களின் கணவரைப் பற்றிக் கேட்டேன். ‘அவர் சுதந்திரமானவரா, அல்லது அடிமையா என்பது எனக்குத் தெரியாது’ என்று அவர் கூறினார்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن عبد الرحمن بن القاسم، قال سمعته منه، عن القاسم، عن عايشة رضى الله عنها انها ارادت ان تشتري بريرة، وانهم اشترطوا ولاءها، فذكر للنبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم " اشتريها فاعتقيها، فانما الولاء لمن اعتق ". واهدي لها لحم، فقيل للنبي صلى الله عليه وسلم هذا تصدق على بريرة. فقال النبي صلى الله عليه وسلم " هو لها صدقة ولنا هدية ". وخيرت. قال عبد الرحمن زوجها حر او عبد قال شعبة سالت عبد الرحمن عن زوجها. قال لا ادري احر ام عبد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2578
- Book Index
- 13
Grades
- -
