ஹதீஸ்கள்
#2565
ஸஹீஹ் அல்-புகாரீ - Contract of Manumission
அய்மன் பின் உம்மி அய்மன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்துவிட்டார். பிறகு அவருடைய மக்கள் எனக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். அவர்கள் என்னை அபூஅம்ருடைய மகனுக்கு விற்றார்கள். ஆனால், உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள்” என்று கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட பரீரா என்னிடம் வந்திருந்தார். ‘‘என்னை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். நான், ‘‘சரி” என்று சொன்னேன். அதற்கு அவர், ‘‘என் உரிமையாளர்கள் தங்களுக்கே (எனது) வாரிசுரிமை வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் என்னை விற்கமாட்டார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘‘அப்படியென்றால் எனக்கு அது தேவையற்றது” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைச் செவியுற்றார்கள்; அல்லது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இது பற்றிக் கேட்க, நான் பரீரா என்னிடம் கூறியதைச் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. அவருடைய உரிமையாளர்கள் தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் நிபந்தனையிட்டுக்கொள்ளட்டும் (அது செல்லப் போவதில்லை)” என்று கூறினார்கள். ஆகவே, நான் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிட்டேன். (அப்போதும்) அவருடைய உரிமையாளர்கள் (அவரது) வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் (அடிமையின் உரிமையாளர்கள்) நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا عبد الواحد بن ايمن، قال حدثني ابي ايمن، قال دخلت على عايشة رضى الله عنها فقلت كنت غلاما لعتبة بن ابي لهب، ومات وورثني بنوه، وانهم باعوني من ابن ابي عمرو، فاعتقني ابن ابي عمرو، واشترط بنو عتبة الولاء. فقالت دخلت بريرة وهى مكاتبة فقالت اشتريني واعتقيني. قالت نعم. قالت لا يبيعوني حتى يشترطوا ولايي. فقالت لا حاجة لي بذلك. فسمع بذلك النبي صلى الله عليه وسلم او بلغه، فذكر لعايشة، فذكرت عايشة ما قالت لها، فقال " اشتريها واعتقيها، ودعيهم يشترطون ما شاءوا ". فاشترتها عايشة فاعتقتها واشترط اهلها الولاء، فقال النبي صلى الله عليه وسلم " الولاء لمن اعتق، وان اشترطوا ماية شرط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Contract of Manumission
- Hadith Index
- #2565
- Book Index
- 6
Grades
- -
