ஹதீஸ்கள்
#2563
ஸஹீஹ் அல்-புகாரீ - Contract of Manumission
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீரா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்து, ‘‘நான் என் உரிமையாளர்களிடம் (விடுதலைத் தொகையாக) ஒவ்வோர் ஆண்டும் ஓர் யிஊக்கியா’ வீதம் ஒன்பது யிஊக்கியா’க்களைச் செலுத்திவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்; ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள்” என்று கேட்டார்.5 நான், ‘‘உன் உரிமையாளர்களுக்கு அந்த யிஊக்கியாக்’களை ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்துவிடுவதை அவர்கள் விரும்பினால் அவ்வாறே செய்கிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினேன். எனவே, பரீரா (ரலி) தன் உரிமையாளர்களிடம் சென்றார். (அவர்களிடம் நான் சொன்னதைக் கூற) அவர்கள் அவரிடம் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்கள். பிறகு பரீரா (என்னிடம் வந்து), ‘‘அவர்களிடம் உங்கள் விருப்பத்தை முன்வைத் தேன். ‘(என்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தால் தவிர அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது’ என்று அவர்கள் மறுத்துவிட்டனர்” என்று கூறினார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது பற்றி) என்னைக் கேட்க, நான் அவர்களுக்கு விவரத்தைச் சொன்னேன். பரீராவை வாங்கி விடுதலை செய்துவிடு. அவருடைய வாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்துவிடு (பின்னர் பார்த்துக்கொள்வோம்.) ஏனெனில், சட்டப்படி விடுதலை செய்ப வருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: இறைவாழ்த்துக்குப்பின்! உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! இறைச் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாது; நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே (ஏற்று) பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும். உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர் ‘‘இன்னாரே! (என் அடிமையை விலைக்கு வாங்கி) விடுதலை செய்துவிடு. ஆனால், வாரிசுரிமை எனக்கே உரியது” என்று கூறுகிறாரே! (உண்மையில்) விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت جاءت بريرة فقالت اني كاتبت اهلي على تسع اواق، في كل عام وقية، فاعينيني. فقالت عايشة ان احب اهلك ان اعدها لهم عدة واحدة، واعتقك فعلت، ويكون ولاوك لي. فذهبت الى اهلها، فابوا ذلك عليها، فقالت اني قد عرضت ذلك عليهم، فابوا الا ان يكون الولاء لهم. فسمع بذلك رسول الله صلى الله عليه وسلم فسالني فاخبرته، فقال " خذيها، فاعتقيها، واشترطي لهم الولاء، فانما الولاء لمن اعتق ". قالت عايشة فقام رسول الله صلى الله عليه وسلم في الناس، فحمد الله، واثنى عليه، ثم قال " اما بعد، فما بال رجال منكم يشترطون شروطا ليست في كتاب الله فايما شرط ليس في كتاب الله فهو باطل، وان كان ماية شرط، فقضاء الله احق، وشرط الله اوثق، ما بال رجال منكم يقول احدهم اعتق يا فلان ولي الولاء انما الولاء لمن اعتق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Contract of Manumission
- Hadith Index
- #2563
- Book Index
- 4
Grades
- -
